உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எக்ஸ் தளத்தில் பெயரை மாற்றிய எலான் மஸ்க்!

எக்ஸ் தளத்தில் பெயரை மாற்றிய எலான் மஸ்க்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: ' எக்ஸ் ' சமூக வலைதள பக்கத்தில், அதன் உரிமையாளரான எலான் மஸ்க், தனது சுயவிவரப் பக்கத்தில் முகப்பு படத்தையும், பெயரையும் மாற்றியது இணையதளவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது.'எக்ஸ்' சமூக வலைதளத்தை வாங்கியது முதல், எலான் மஸ்க் அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். தனது பக்கத்திலும் அவ்வப்போது, முகப்பு படத்தை மாற்றி வந்தார். இதற்கு முன்னர் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்பிற்கு ஆதரவாக முகப்பு படத்தை வைத்து இருந்தார்.இந்நிலையில், தனது சுய விவரப் பக்கத்தில், எலான் மஸ்க் தனது பெயரை கெகியஸ் மேக்சிமஸ்(Kekius Maximus) என மாற்றி உள்ளார். மேலும், தனது படத்தை முகப்பு படமாக வைத்து இருந்த நிலையில் அதனை நீக்கிவிட்டு, கார்ட்டூன் சித்திரமான ' pepe the frog' என்ற தவளையின் படத்தையும் வைத்து உள்ளார்.கெகியஸ் மேக்சிமஸ் என்ற பெயர், கிரிப்டோகரன்சி சந்தையில் பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. இது தொடர்பான மீம்களையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலான் மஸ்க் பகிர்ந்து இருந்தார்.இந்த மாற்றத்தை செய்ததற்கான காரணம் எதையும் எலான் மஸ்க் கூறவில்லை. இருந்தாலும், இந்த துறையில் அவர் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி