உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்; கட்சி தொடங்கினார் மஸ்க்!

அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்; கட்சி தொடங்கினார் மஸ்க்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், 'அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mnfq9go7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, அமெரிக்கா கட்சி என்ற பெயரில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: இன்று அமெரிக்கக் கட்சி உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்ப கொடுக்க உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்.2க்கு 1 என்ற விகிதத்தில், நீங்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீர்கள். அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். நமது நாட்டை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் விஷயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.''மானியங்கள் இல்லையென்றால், மஸ்க் கடையை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். அதன் பின் ராக்கெட் ஏவ முடியாது. செயற்கைக்கோள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது'' என டிரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில் டிரம்பை எதிர்த்து எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளம் , ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை உலகம் முழுவதும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Matt P
ஜூலை 06, 2025 11:35

கட்சி ஆரம்பித்து விட்டார். ஆனால் ஜனாதிபதி ஆக முடியாது அமெரிக்காவில் பிறக்காமல் தென் ஆப்பிரிக்காவில் பிறந்ததற்காக.


sankaranarayanan
ஜூலை 06, 2025 10:27

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை எளாண் மாஸ்க் நிறுப்பித்து காட்டிவிட்டுட்டார் அன்னார் பல்லாண்டு வாழ்க வளர்க வெல்க


Rajan A
ஜூலை 06, 2025 10:03

அமெரிக்க வெற்றி கட்சினு பெயரை மாத்துங்க ப்ரோ. வீட்டில் உட்கார்ந்து நான்தான் அடுத்த ஜனாதிபதினு தனியா பேசிக்கலாம்


தமிழ்வேள்
ஜூலை 06, 2025 09:49

கூட்டணி பேரணி சவால் அரசியல் கட்டவுட் கலாச்சாரம் ஆகிய திராவிட அரசியல் சிறப்பம்சங்களை இனி நிறைய எதிர்பார்க்கலாம். மூன்றாவது ஒரு கட்சி அரசியலில் நுழைந்தால் சகல கோமாளித்தனங்களும் தந்திரங்களும் கொடிகட்டிப் பறக்கும்.


Jack
ஜூலை 06, 2025 09:27

திராவிட தலைவர்களிடம் அரசியல் பாடம் கற்றுக்கொண்டால் வெற்றி உறுதி


KRISHNAN
ஜூலை 06, 2025 08:34

ஒரு நண்பனாக இருந்தவன் எதிரியாக உருவாக்கப்பட்டான் அவரவர் கர்மா, அவரவர் வாழ்வின் வழியில், விதைத்தாய், முளைத்தது, பிறந்தது,


Kasimani Baskaran
ஜூலை 06, 2025 08:20

டிரம்ப்பை ஒரு காமடி பீஸ் என்று நிரூபித்த இன்னுமோர் காமடியர்...


RAJ
ஜூலை 06, 2025 07:43

தூள் கிளப்பு தலைவரே.. ..


V K
ஜூலை 06, 2025 07:12

அங்கேயும் ஒரு காமெடி பீஸ் இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை