உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை

பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை

வாஷிங்டன்: பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ., எனும் துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறையின் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார். இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த 4,000 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியுதவிகளை முழுமையாக நிறுத்தியுள்ளது. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தாமாக முன்வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாதம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சமூக வலைதளத்தில், அரசு ஊழியர்கள் தொடர்பாக அதிபர் டிரம்ப் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். அந்த பதிவில் டிரம்ப், 'பணியாளர்களைக் குறைக்கும் முயற்சிகளில் டி.ஓ.ஜி.இ., இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்' என கூறியிருந்தார்.

மஸ்க் அதிரடி

அதிபர் டிரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் கெடு விதித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,'அடுத்த 48 மணி நேரத்திற்குள் கடந்த வாரத்தில் என்ன வேலைகளை செய்தீர்கள் என்று அரசு ஊழியர்கள் மெயிலில் விளக்கம் அளிக்க வேண்டும். பதில் அளிக்காத பட்சத்தில் அவர்கள் ராஜினாமா செய்ததாக கருதப்படுவர்' என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

K B JANARTHANAN
பிப் 23, 2025 17:36

இதில் கவனிக்க வேண்டியது ,பொறுப்பற்ற அரசு ஊழியர்களை மட்டுமே பணி நீக்கம் செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து முடிப்பதில்லை. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கில்லை. வேலைப் பாதுகாப்பு அரசு ஊழியரைத் தங்கள் கடமைகளில் மந்தமாக ஆக்குகிறது. எனவே பொறுப்பற்ற அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்படுவது எந்த அநீதியும் இல்லை.


சண்முகம்
பிப் 23, 2025 12:55

லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தாங்கள் செய்த வேலைகளை எழுதிக் கொடுத்தால் அதை தரம் பார்த்து, சரி பார்ப்பவர் யார்? அரசு வேலை அறியாத, கல்லூரிக்குக்கூட செல்லாத மஸ்க்கின் 18 வயது ஆட்களா?


Laddoo
பிப் 23, 2025 14:59

மிஸ்டர் 200ரூவா அந்த பணியை எஐ செய்துவிடும்.


Barakat Ali
பிப் 23, 2025 12:18

ஜெ க்கு ஒரு சசி .... டிரம்புக்கு ஒரு எலான் மஸ்க் ....


Laddoo
பிப் 23, 2025 15:02

சசி ஓர் சதி. ஜெயாவை கைக்குள் போட்டுக் கொண்டு ஊழலின் உச்சத்தை தொட்ட பாவக்காரி.


Sridhar
பிப் 23, 2025 11:54

மஸ்கு மஸ்கு உன்னைப்போல ஒருவன் எங்க நாட்டுக்கு எப்பய்யா கிடைப்பான்? ஒவ்ரநைட்டுல இந்தியாவில் உள்ள ஏழைகளின் கஸ்டமெல்லாம் தீந்துடுமே


Yes your honor
பிப் 23, 2025 10:52

எலன் மாஸ்கை மெட்ராஸுக்கு ஒரு ஒருவருடத்திற்கு பார்சல் செய்து அனுப்ப சொல்லவேண்டும். திராவிடமும் ஊழலும் பிரிக்க முடியாத இருபெரும் நண்பர்கள் என்று அமெரிக்காவில் கூற ஆரம்பித்துவிடுவார்.


Haja Kuthubdeen
பிப் 23, 2025 17:22

மற்ற மாநிலத்தில் அரசு ஊழியர்களின் செயல்பாடு சிறப்பா இருக்கா..


hariharan
பிப் 23, 2025 10:41

இவரை தமிழ்நாட்டு பக்கம் அனுப்பி வையுங்கள். இங்கே அரசு அலுவலகத்தில் யாருக்கும் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமில்லை. எல்லாம் காசு கொடுத்தல் நடக்கும் பக்கத்து சீட் காரன் எங்கேன்னு கேட்டால் அடுத்த சீட் காரனுக்கு தெரியாது. நல்லா மஞ்சக்குளிச்சுக்குட்டு இருக்கறவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு வாரமும் என்ன வேலை செய்திருக்கிறார்கள் என்று உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் நடைமுறையை கொண்டு வரவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை