உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு ரூ.9.51 லட்சம் கோடி வட்டியில்லா கடன்; ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

உக்ரைனுக்கு ரூ.9.51 லட்சம் கோடி வட்டியில்லா கடன்; ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரஸ்ஸல்ஸ்: ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் 4 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இரு நாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஏதும் கைகொடுக்கவில்லை. உக்ரைன் நிலப்பரப்பை கைப்பற்றுவதில் ரஷ்ய அதிபர் புடின் பிடிவாதமாக இருந்து வருகிறார்.இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் உதவ ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அந்தோனியா கோஸ்டா கூறுகையில், 'நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளோம். 2026-27ம் ஆண்டுக்காக உக்ரைனுக்கு ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்தத் தொகையானது, ஐரோப்பிய ஒன்றியத்தால் மூலதனச் சந்தைகளில் கடன் வாங்கப்பட்டு, 27 நாடுகளின் கூட்டமைப்பின் 7ஆண்டு வரவு செலவுத் திட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்படும். மேலும், ரஷ்ய சொத்துக்களை விற்று பணமாக்குவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Balaji
டிச 20, 2025 11:26

உக்ரைன் அந்த் பணத்தில் ஆயுதம் வாங்க உபயோகிக்கும். அதனால் அந்த பணம் கடன் கொடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கு அல்லது அமெரிக்காவுக்கு கிடைத்துவிடும்.


N Sasikumar Yadhav
டிச 19, 2025 19:59

இந்துமத துரோக திராவிட மாடல் அரசு பெண்களுக்கு உரிமைத்தொகை என்கிற பெயரில் கொடுக்கிற ஆயிரம் ரூபாயை திராவிட மாடல் சாராயக்கடை மூலம் வசூலிப்பதை போல ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்கள் விற்பனை செய்வதன்மூலம் வசூலித்துவிடும்


Santhakumar Srinivasalu
டிச 19, 2025 13:23

உக்ரைன் நிலபரப்பை ஆக்கிரமித்து அங்குள்ள அணுபொருள் மற்றும் அரிய பொருள்களை கைப்பற்றுவது தான் ரஷ்யாவின் எண்ணம்! அது நடந்தால் உலக நாடுகளுக்கு கேடு!


Anbuselvan
டிச 19, 2025 13:16

ஒ, பணம் கறக்க இப்படி ஒரு வழி இருக்காதா? இது தெரியாம போயாச்சே சில கட்சியினருக்கு இங்கே


Ramesh Sargam
டிச 19, 2025 12:36

கொடுக்கப்படும் அந்தக்கடன் உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பயன்படுத்தப் பட்டால் சிறப்பு. அந்த கடனில் மீண்டும் ராணுவ உபகரணங்களை வாங்கி போரை தொடர்ந்தால்...? அது சரியல்ல. ஐரோப்பிய ஒன்றியம் கடனை கொடுக்கும்போதே அந்த நிபந்தனையை சொல்லி கடன் கொடுக்கவேண்டும்.


Thravisham
டிச 19, 2025 14:01

Super


Thravisham
டிச 19, 2025 14:01

சூப்பர்


Saai Sundharamurthy AVK
டிச 19, 2025 12:13

இப்போது யார் நிதி அளித்து உக்ரைனில் போரை ஊக்குவிப்பது...? அமெரிக்காவின் மூளைக்கு இந்த விஷயம் எட்டுமா ???? ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வரிகளை போடுவாரா ????


தியாகு
டிச 19, 2025 12:09

நல்ல சான்ஸ் போச்சே.


ஆரூர் ரங்
டிச 19, 2025 11:48

ரஷ்யா சீனா அமெரிக்கா மூன்றுமே. உலகத்தை சுரண்டி வாழும் அரக்கர்கள்.


Vasan
டிச 19, 2025 13:35

தமிழ் நாடு ?


அசோகன்
டிச 19, 2025 11:47

ஐரோப்பா அழியும் காலம் அருகில் தெரிகிறது.. கர்மா வேலை செய்கிறது. மிக குறைவான விலையில் எரிபொரும் மற்றும் உணவு பொருட்களை ரஷியா விடம் வாங்கி அனுபவித்துக்கொண்டு இருந்த ஐரோப்பா இப்போது பலமடங்கு அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவருகிறது. பிரியாக வந்த வாயு குழாய் யையும் zelansky மூலமாக உடைத்து விட்டார்கள். இப்போதெல்லாம் தினம் தினம் அங்கே போராட்டம் வெடித்துக்கொண்டுள்ளது......


Ganesh
டிச 19, 2025 11:37

உக்ராயின் அதிபற்கு எப்போது புரியுமோ இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை என்று...?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை