உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொளுத்தும் வெயிலால் தகிக்கும் ஐரோப்பிய நாடுகள்

கொளுத்தும் வெயிலால் தகிக்கும் ஐரோப்பிய நாடுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம் : கடும் வெப்ப அலையால் ஐரோப்பிய நாடுகள் தகிக்கின்றன. ஆஸ்திரியாவில் வெப்பநிலை புதிய சாதனை அளவை எட்டியுள்ளது.ஐரோப்பாவில், கடும் வெப்ப அலை நிலவுகிறது. இதனால் அங்குள்ள நாடுகளின் வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ளது. இதன் காரணமாக, சுகாதாரம், மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் தேசிய வெப்ப கண்காணிப்பு அமைப்பின் கீழ் உள்ள, 27 முக்கிய நகரங்களும், நடப்பாண்டில் முதன்முறையாக ஒரே நேரத்தில் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ரோம் நகரில் மக்களுக்காக நகர்ப்புற கடற்கரை மற்றும் மிஸ்ட் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியாவில், 41.2 டிகிரி செல்ஷியசும், ஸ்லோவாக்கியாவில், 42.2 டிகிரி செல்ஷியசும் வெப்பம் பதிவாகி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளன. கடும் வறட்சியால் டான்யூப் நதியில் நீர்மட்டம் குறைந்து, நீர்மின் மற்றும் அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நதிகளின் நீர்மட்டம் குறைந்ததால், நீர்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பால்கன் நாடுகளில் காட்டுத்தீ பரவி வருவதால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
ஆக 08, 2026 10:16

கடுங்கோடையில் இந்தியாவில் 43+ சர்வ சாதாரணம் .......


SUBBU,MADURAI
ஆக 08, 2026 04:34

இதற்கு முன் நம்மை யார் பாராட்டினாலும் இந்த இறைவி மட்டும் நம்மள கண்டுக்க மாட்டாங்க இப்ப அந்த இறைவியே நம்மள பாராட்டியிருக்காங்கன்னா.... நன்றி!


priyan, vadanad, madurai
ஆக 08, 2026 08:12

கல்லுக்குள் (ups க்குள்) ஈரம்


Barakat Ali
ஆக 08, 2026 10:15

high value


Barakat Ali
ஆக 08, 2026 10:35

ஹை வேல்யூ விமன் என்று அவரைப்பற்றி குறிப்பிட்டது இப்படி வந்துள்ளது ....


KRISHNAN R
ஆக 07, 2026 22:25

கொடுமை தான்


Ramesh Sargam
ஆக 07, 2026 22:17

இயற்கைகளை வளர்ச்சி என்கிற பெயரில்அழித்தால், வெயில் கொளுத்தாமல், குளிரவா செய்யும்???


SUBBU,MADURAI
ஆக 07, 2026 22:16

ஐரோப்பியர்கள் 30 to 40 °C வெப்பத்திலேயே கடும் வெப்ப அலை என்று புலம்புகிறார்கள், ஆனால் இந்தியாவில் நாமோ 45 முதல் 50 °C வெப்பத்தில்கூட வசதியாக வாழ்கிறோம். உண்மையில், இது ஒரு நியாயமான ஒப்பீடு அல்ல. கோடையில் நீங்கள் எவ்வளவு அசௌகரியமாக உணர்வீர்கள் என்பதை வெப்பநிலை மட்டுமே தீர்மானிப்பதில்லை. 1) ஈரப்பதம்: இந்தியாவின் கோடைக்கால உச்ச வெப்பம் பொதுவாக வறண்டதாக இருக்கும். வறண்ட காற்றில், வியர்வை உடனடியாக ஆவியாகி, உடலின் இயற்கையான குளிர்விக்கும் செயல்முறையைத் தூண்டுகிறது. சுற்றியுள்ள பெருங்கடல்களால் ஐரோப்பாவின் வெப்ப அலைகள் அதிக ஈரப்பதம் கொண்டவையாக இருக்கின்றன. காற்றில் ஏற்கனவே ஈரப்பதம் நிறைந்திருக்கும்போது, ​​வியர்வை ஆவியாகாது அது தோலில் தங்கி, உடலின் உள் வெப்பத்தை உள்ளே தக்கவைத்து, மூச்சுத்திணறல் போன்ற உணர்வை உருவாக்குகிறது. இது, மும்பையின் 40°C வெப்பம், டெல்லியின் 40°C வெப்பத்தை விட கணிசமாக மோசமாக உணரப்படுவது போன்றது. 2) கட்டிடக்கலை: ஐரோப்பிய உள்கட்டமைப்பு வெப்பத்தைத் தக்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் இந்தியக் கட்டிடக்கலை அதை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உறைபனிக் குளிர்காலத்தைத் தாங்குவதற்காக, ஐரோப்பியக் கட்டிடங்களில் தடிமனான வெப்பக் காப்பு மற்றும் இரட்டைக் கண்ணாடி ஜன்னல்கள் இடம்பெற்றுள்ளன. வெப்ப அலைகளின் போது, ​​அவை அடுப்புகளைப் போலச் செயல்பட்டு, நாள் முழுவதும் வெப்பத்தை உறிஞ்சி, இரவில் அதை உள்ளே செலுத்துகின்றன. இதற்கு மாறாக, பாரம்பரிய இந்திய வீடுகள் நேரடி சூரிய ஒளியைத் தடுக்க உயரமான கூரைகள், குறுக்கு காற்றோட்டம், பளிங்கு அல்லது கல் தரைகள் மற்றும் வெளிப்புற மேற்கூரைகளைப் பயன்படுத்துகின்றன. 3) ஏசி பற்றாக்குறை: இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் ஏசிகள் அல்லது செயற்கை குளிரூட்டிகள் மூலம் குளிரூட்டும் மண்டலங்கள் ஒரு பொதுவான உள்கட்டமைப்பாகும். இதற்கு மாறாக, மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பாவில் குடியிருப்புகளின் குளிர்சாதனங்கள் மிகவும் அரிதானவை 10% க்கும் குறைவான வீடுகளில் மட்டுமே அவை உள்ளன. வெப்ப அலை தாக்கும்போது, ​​மக்கள் ஒளிந்துகொள்ள இடமில்லாமல், வீட்டிலும், பொது சுரங்கப்பாதைகளிலும், உள்ளூர் கடைகளிலும் இடைவிடாத வெப்ப வெளிப்பாட்டை எதிர்கொள்கின்றனர். 4) புவியியல்: ஐரோப்பா மிக உயர்ந்த அட்சரேகையில் அமைந்துள்ளதால், கோடைக்கால பகல் பொழுதுகள் கணிசமாக நீளமாக இருக்கின்றன, சூரியன் இரவு 10 மணி வரை தாமதமாக மறைகிறது. கட்டிடங்களும் தார்ச் சாலைகளும் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை நேரடி சூரிய ஒளியில் காய்ந்துவிடுகின்றன. இதனால், இரவில் கிடைக்கும் 8 மணி நேரக் குறுகிய கால அவகாசத்தில் தரையும் சுவர்களும் குளிர்ச்சியடைவது கடினமாகிறது. இதனால், வெப்பம் நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரிக்கிறது. 5) தட்பவெப்பநிலைக்கேற்ப பழகுதல்: காலப்போக்கில் நமது உடல் அதன் சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறது வெப்பமான காலநிலைகளில் வாழும் மக்கள், வெப்ப அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக, இயல்பாகவே அதிக வியர்வை வீதத்தையும் சரிசெய்யப்பட்ட இரத்த ஓட்டத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, இந்திய வாழ்க்கைமுறை சூரியனுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது, பிற்பகல் உச்ச நேரங்களில் தெருக்கள் வெறிச்சோடிவிடுகின்றன, வணிகங்களும் மந்தமாகின்றன. ஐரோப்பாவில் இந்த அடிப்படை நிலை இல்லை, மேலும் வெப்ப அலைகள் அவ்வப்போது ஏற்படுவதால், அன்றாடப் பணிகள் மற்றும் கடினமான உடல் உழைப்பு வழக்கம் போல் தொடர்கின்றன, இதுவே விரைவான சோர்வுக்கு வழிவகுக்கிறது.


இறைவி
ஆக 08, 2026 00:00

மிக அருமையான மற்றும் ஆணித்தரமான உண்மை விளக்கம் மதுரை சுப்பு. நன்றி.


SS
ஆக 08, 2026 13:57

தங்கள் பதிலில் இருந்து நிறைய விவரங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி


இளந்திரையன் வேலந்தாவளம்
ஆக 07, 2026 22:05

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.... இயற்கை வெச்சு செய்யும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை