உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெனீவா: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு ஆசிய நாடான ஈரானை, அணு ஆயுத தயாரிப்பில் இருந்து தடுக்க, 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்தன. இந்த ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டதால், அந்நாட்டின் மீதான ஐ.நா.,வின் பல தடைகள் நீக்கப்பட்டன.இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், 2018ல் வெளியேறினார். இதையடுத்து ஈரான், யுரேனியத்தை அணு ஆயுத தரத்திற்கு செறிவூட்டும் பணியில் இறங்கியது. இது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கூறி, ஈரான் மீது கடந்த ஜூனில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் 12 நாட்கள் நீடித்தது.இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி வளாகங்கள் மீது குண்டுகளை வீசியது. அணுசக்தி வளாகங்கள் சேதமடைந்ததாக கூறி, சண்டையை நிறுத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. அதை ஏற்று, இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலை நிறுத்திக் கொண்டன.தற்போது ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகியவை, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று பேச்சு நடத்தின.அதில், ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையின் அதிகாரிகளை தங்கள் நாட்டின் அணுசக்தி வளாகங்களுக்குள் அனுமதிக்க வேண்டும், 60 சதவீத தரத்தில் செறிவூட்டி வைத்துள்ள 400 கிலோ யுரேனியத்தை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும், அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.ஆனால், அது எதையும் ஈரான் ஏற்கவில்லை. இதனால் பேச்சு இழுபறியில் முடிந்தது. இதனால், மூன்று ஐரோப்பிய நாடுகளும் 2015க்கு முன், ஐ.நா., விதித்த பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்தும் பணிகளை துவக்குவோம் என எச்சரித்துள்ளன.ஈரானுடனான சர்வதேச நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தத்தில் 'ஸ்னாப்பேக்' செயல்முறை என்ற ஒன்று உள்ளது. இதன்படி ஈரான் ஒப்பந்தத்தை மீறியதாக, அதை உருவாக்கிய ஐந்து நாடுகளில் ஏதேனும் ஒன்று கருதினால், இந்த செயல்முறையை கொண்டு வரலாம்.இது ஐ.நா.,வின் 2015க்கு முந்தைய பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அனுமதிக்கும். ஆனால், இந்த தீர்மானம், வரும் அக்டோபர் 18ல் காலாவதி ஆகிறது. அதற்குள் ஈரானை வழிக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் தருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Azar Mufeen
ஆக 28, 2025 19:17

கம்மேனி, நேதான்யாகு இருவரையும் ட்ரம்ப் தூண்டிவிட்டு குளிர் காய்கிறார், இந்த மூவரும் பதவியில் இல்லாமல் இருந்தாலே எல்லாம் அடங்கிவிடும்


ஸ்ரீ ராஜ்
ஆக 28, 2025 11:41

திமுக போன்று 13 வருடங்கள் MGR இருந்தபோதும், தொடர்ந்து 10 வருடங்கள் அம்மா ஆட்சி இருந்த போதும் - எப்படி தாக்கு பிடித்ததோ - அதுபோல்..


சாமானியன்
ஆக 28, 2025 11:27

மதரீதியாக நேட்டோ நாடுகள் ஈரானை நினைத்து பயப்படுகின்றன. தூரமும் குறைவு. அணுஆயுதம் தயாரிக்க உலோகங்கள் இருந்தாலும் அரைகுறை வழிமுறைகளால் ஈரான் மட்டுமல்ல பாகிஸ்தானும் அணுஆயுத பரிசோதனைகளை வெற்றிகரமாக செய்ய விஞ்ஞானிகள் கிடையாது. விஞ்ஞானிகளை கடத்துவதும் நடக்கத்தான் செய்கிறது. இந்த ஃபில்டு அந்தமாதிரி ரிஸ்க்.


Abdul Rahim
ஆக 28, 2025 10:24

ஈரானை நிராயுதபாணியாக்கி விட்டு தங்களது இஸ்ரேலிய தோழனுக்கு ஈரானை தாக்குவதற்கு வழியை எளிதாக்க இந்த குதர்க்க ஐரோப்பிய நாடுகள் சதி திட்டம் போடுகின்றன இவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருப்பார்களாம், இஸ்ரேலும் வைத்துக் கொள்ளுமாம் ஆனால் ஈரான் வைத்துக்கொள்ள கூடாதாம், இந்த நரி தந்திரம் தோற்றுத்தான் போகும், 13 வருட பொருளாதார தடையையே தாங்கி நிலைத்து நின்று வளர்ச்சியை கண்ட ஒரு நாட்டை இன்னமும் அடிபணிய வைக்க நினைப்பது கோழைத்தனம் அது நடக்காது ...


Mohammed
ஆக 28, 2025 10:48

super


KavikumarRam
ஆக 28, 2025 11:26

உங்கள் கருத்தில் நான் நூறு சதம் உடன் படுகிறேன். ஆனால் நீங்கள் இஸ்லாமியர் என்ற அடிப்படையில் இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள். ஆனால் என்றுமே எனக்கு ஈரான் எனும் பெர்சிய கலாச்சாரம் மீதும் அதன் மக்கள் திறமையின் மீதும் மிகுந்த மரியாதை உண்டு பாரத கலாச்சாரம் போல மிகவும் முன்னேறிய கலாச்சாரம். அமெரிக்காவை மிகச்சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள். ஒரே பிரச்சினை அமேரிக்கா மாதிரி அந்த ஏரியா தாதா ஆகும் முயற்சியில் தங்கள் நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள்.


MUTHU
ஆக 28, 2025 09:58

ஈரான் அணு ஆயுதம் வைத்திருந்தால் என்னப்பா? மற்ற நாடுகள் விஷயத்தில் தலையிட ஏதாவதொரு காரணம் வைத்திருப்பான் மேலை நாட்டான்.


ஆரூர் ரங்
ஆக 28, 2025 09:23

அண்டையில் எதிரிகளே இல்லாத ஃபிரான்ஸ் இங்கிலாந்து எதற்காக அணு ஆயுதங்களை வைத்துள்ளன? ஈரான் மட்டும் வைத்துக் கொள்ள கூடாது என்பதற்கு காரணம் கூற முடியாது.