உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தான் அகதிகள் பாக்.,-கிலிருந்து வெளியேற்றம்

ஆப்கானிஸ்தான் அகதிகள் பாக்.,-கிலிருந்து வெளியேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை விட்டு, 40,000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்த பின், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இதையடுத்து, அகதிகளின் எண்ணிக்கை அதிகமானதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், பொது சேவைகளில் அழுத்தம் கொடுப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. கடந்த, 2023 முதல், ஆப்கானிஸ்தான் சட்டவிரோத குடியேறிகள் உட்பட அனைத்து வெளிநாட்டினரையும் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்தப்படுவர் என்றும் எச்சரித்தது. நாடு முழுதும், 54 ஆப்கன் அகதி முகாம்களை மூட உத்தரவிட்டதன் மூலம் நாடு கடத்தல் நடவடிக்கைகளை பாகிஸ்தான் கடுமையாக்கியது. இந்நிலையில், பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் இருந்து, 40,000 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SUBBU,MADURAI
நவ 02, 2025 14:10

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இதற்கு உரிய பலனை பாகிஸ்தான் இன்னும் இரண்டு நாட்களுக்குள் அனுபவிக்கும்.


Rathna
நவ 02, 2025 12:00

மர்ம நபர்கள் அடித்து கொண்டு சாவது அவன் தலையில் எழுதப்பட்டு உள்ளது. உலகத்தில் எந்த பகுதியிலும் அவனுக அமைதியாக இல்லை. இது தான் உண்மை.


S.L.Narasimman
நவ 02, 2025 07:48

என்ன இழவு இது. இருவரும் ஓரே மதத்தை சார்ந்தவர்கள். வேறு வேறு மதமாய் இருந்தால் பரவாயில்லை. துரத்தலாம். இது பாவம். கொடுமை.


Kasimani Baskaran
நவ 02, 2025 07:07

இரண்டு பக்கமும் பிரச்சினை. ஒரு பக்கம் அடிப்படை வாதிகளான வீரர்கள் - அடுத்த பக்கம் தீவிரவாதிகள். இதில் எதை தேர்வு செய்வது என்று முடிவு செய்வதற்குள் திரும்ப அனுப்புகிறார்கள்.


நிக்கோல்தாம்சன்
நவ 02, 2025 06:19

இந்தியாவில் கூட ஏராளமான பாகிஸ்தானியர்கள் 1947 பிறகு தங்கியிருக்கிறார்கள் அவர்களை வெளிய அனுப்பலாமா பாக்கிஸ்?


Anonymous
நவ 02, 2025 13:48

அது எப்படி அனுப்புவாங்க? ஓட்டு வங்கி என்னாவது?


முக்கிய வீடியோ