உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேஸ்புக், இன்ஸ்டா கணக்கு விபரம் அவசியம்; மாணவர்கள் விசாவுக்கு அமெரிக்கா போட்ட நிபந்தனை

பேஸ்புக், இன்ஸ்டா கணக்கு விபரம் அவசியம்; மாணவர்கள் விசாவுக்கு அமெரிக்கா போட்ட நிபந்தனை

வாஷிங்டன்: பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் கல்வி பயில்வதற்காக, அமெரிக்காவுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்காக மாணவர்கள் விசாவை அமெரிக்க வழங்கி வருகிறது. ஆனால், கடந்த மாதம் மாணவர்கள் விசாவுக்கான நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களின் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளின் விபரங்களை விண்ணப்பங்களில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சமூக வலைதளப் பக்க கணக்குகளின் பதிவுகளை அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுக்கோ, மக்களுக்கோ எதிராக பதிவுகளை பகிர்ந்துள்ளார்களா? என அவர்களின் சமூக வலைதளப் பக்க செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர். இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்தப் புதிய நடைமுறைகள் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bhaskaran
ஜூன் 20, 2025 09:09

ஒரு நாட்டுக்கு போனோம் என்றால் அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்


கல்யாணராமன்
ஜூன் 19, 2025 09:18

பேஸ்புக், இன்ஸ்டா மாணவர்கள் உபயோகிக்க தடை விதிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை