உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம்: பெண் ஊழியரின் செயல் இணையத்தில் வைரல்

கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம்: பெண் ஊழியரின் செயல் இணையத்தில் வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர் : சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கழிப்பறை காகிதத்தில் எழுதிய ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. சிங்கப்பூரில் நிறுவனம் ஒன்றில் இயக்குநராக பணியாற்றியவர் ஏஞ்சலா யோ. இவர், நிறுவனத்தில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர், கழிப்பறை காகிதத்தில் அனுப்பி உள்ளார்.இந்த கடிதத்தை 'லிங்க்ட் இன்' சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த கடிதத்தில் ஏஞ்சலா யோ கூறியுள்ளதாவது: நான் ஒரு கழிப்பறை காகிதத்தைப்போல தேவைப்பட்ட போது இழிவாக நடத்தப்பட்டேன். தேவை ஏற்பட்ட போது பயன்படுத்தப்பட்டேன். தேவை முடிந்ததும் மறு சிந்தனை இன்றி தூக்கி எறியப்பட்டேன். அந்த வார்த்தைகள் எனது நினைவை விட்டு அகல மறுக்கிறது. ஊழியர்கள் உண்மையாக பாராட்டப்படுவதை உணர வைக்க வேண்டும். அவர்கள், நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நன்றியுணர்வுடன் வெளியேற வேண்டும். மன கசப்புடன் அல்ல. இந்த மாதிரியான அனுபவம் விசுவாசமின்மையை குறிக்காது. நிறுவனத்தின் கலாசாரத்தைப் பற்றி அதிகம் பேசும்.பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதை பிரதிபலிப்பதுடன், அவர்கள் செய்யும் பணிகளையும், அவர்கள் யார் என்பதையும் எடுத்துக்காட்டும்.பணியாளர்கள் தங்களை குறைத்து மதிப்பிடுவதாக உணர்ந்தால், அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. பாராட்டுதலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை இன்றே துவங்குங்கள் எனக்கூறி உள்ள அவர், அந்தப்பதிவுடன் கழிவறைக் காகிதத்தில் எழுதப்பட்ட ராஜினாமா கடிதத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன், இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை உணர்த்துவதற்காக நான் ராஜினாமாவுக்கு இந்த காகிதத்தை தேர்வு செய்தேன். வெளியேறுகிறேன் எனத் தெரிவித்து உள்ளார்.இந்த ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 11:12

பெயரைக்கூட குறிப்பிடாமல்?? யார் ராஜினாமா செய்தார்கள் என்று எப்படி ஊகிப்பார்கள் ??


நிக்கோல்தாம்சன்
ஏப் 16, 2025 04:32

தமிழர்கள் நிறைய பேர் இப்படி எழுதப்போறாங்க


Kasimani Baskaran
ஏப் 16, 2025 03:42

வேலை செய்ய ஆரம்பித்து ஐந்தாண்டுகளில் ஐந்து இலக்கத்தை சம்பளம் தாண்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பலர் வேலைக்கு சேருகிறார்கள். கணவன் மணைவி இருவரும் வேலை செய்தால்தான் சுபிட்சம் என்ற ஒரு பொருளாதார நிலை - வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். தொழிலாளர் சட்டம் வேலை செய்வோருக்கு ஆதரவாக இல்லை என்பதால் இது போன்ற பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பல மனித வளத்தை மதிக்கத்தெரிந்த நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பல 3-5 மாத போனஸ் கொடுக்கும் நிறுவனங்கள் கூட இங்கு உண்டு - ஆனாலும் அங்கு வேலை செய்வோரை கேட்டால் இது போலத்தான் நன்றாக நடத்தவில்லை என்பார்கள். இது சிங்கப்பூர் நார்ம் என்று பலர் கடந்து போய் விடுகிறார்கள்.


karupanasamy
ஏப் 16, 2025 02:09

சிங்கப்பூர் மோசமான ரேசிசம் உள்ள ஊர். இண்ட்டு என்று இந்தியர்களை சீனர்கள் மோசமாக நடத்துவார்கள். சிங்கப்பூர் சீனர்களின் ஹோக்கைன் மொழி பேசுபவர்கள் அதிகம் ஹோக்கைன் பேசுபவர்களின் முதல் ஆதரவு அந்தமொழி பேசுபவர்களுக்குத்தான், டியோச்சு மொழி பேசுபவர்கள் அதே மொழிபேசுபவர்களைத்தான் முதல் தேர்வாக வைத்து இருப்பார்கள். சிங்கப்பூர் இந்தியர்கள் பெரும்பாலும் செக்கூரிட்டி கார்டுகளாகத்தான் வேலை பார்ப்பார்கள். இந்த நிலைமை 1990 களுக்குப்பின் அதிகமான ஐ டி மற்றும் பொறியியல் திறனாளர்கள் இந்தியாவிலிருந்து அங்கு குடிபெயர்ந்து இந்திய சமூகத்தின் நிலைமையை உயர்த்தினார்கள். சீனர்களின் இண்டூ பார்வை மாறியது. இப்பொழுது இன்டூக்களை போட்டியாளர்களாக பார்க்கிறார்கள்.


Balaji
ஏப் 16, 2025 00:35

உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல் சடங்கிற்கு தொழிலாளர் நலம் பேசுவது இன்று பல கம்பெனிகளில் நடைமுறையில் உள்ள ஒன்று.. தொழிலாளர் நலன் என்பது அர்த்தமற்ற ஒன்று கார்ப்பரேட் உலகத்தில்.. செய்யும் தொழிலுக்கு சொல்லிய சம்பளம் தரப்படுகிறது.. அத்தோடு நின்றுவிடவேண்டும்..


கத்தரிக்காய் வியாபாரி
ஏப் 16, 2025 00:14

வேலையை நேசியுங்கள், வேலை செய்யும் இடத்தை நேசிக்காதீர்கள்


மீனவ நண்பன்
ஏப் 16, 2025 05:30

கருத்து இப்படி தான் இருக்கும்


மீனவ நண்பன்
ஏப் 15, 2025 22:56

சிங்கப்பூரில் இந்த நிலைமையா ? அமெரிக்காவில் இன்னமும் மோசம் ..தூங்கி எழுந்து மொபைலை பார்த்து வேலை இருக்கா என்று தெரிந்து கொள்ளும் நிலை


Balaji
ஏப் 16, 2025 00:37

நம்ம ஜீ தான் காரணமோ? ஹி ஹி..


இளந்திரையன், வேலந்தாவளம்
ஏப் 15, 2025 22:55

வேலை செய்வதற்காக வாழக்கூடாது... வாழ்வதற்காக வேலை செய்யவேண்டும்...


மீனவ நண்பன்
ஏப் 16, 2025 00:55

உணவை பற்றி உண்ணுவதை பற்றி இப்படி சொல்லுவார்கள் ..அடுத்தவனை கேனயன்னு நெனச்சு ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை