உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் பிரதமருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பிரிட்டன் பிரதமருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன் : பிரிட்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை நேற்று சந்தித்து, தாராள வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்தினார். ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு, அரசு முறை பயணமாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். தலைநகர் லண்டனில் நேற்று நடந்த, இந்தியா - பிரிட்டன் இடையேயான, 13வது பொருளாதார மற்றும் நிதி கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதில், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், அந்நாட்டின் நிதி அமைச்சர் ரச்சல் ரீவ்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், இந்தியா - பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை துவங்குவது, பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமருடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து, இந்தியா - பிரிட்டன் இடையே இரு ஆண்டுகளுக்கும் மேல் பேச்சு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

VSMani
ஏப் 13, 2025 10:59

பிரிட்டன் பிரதமருடன் நிதி அமைச்சர் இந்தியில் பேசினாரா அல்லது ஆங்கிலத்தில் பேசினாரா?


TRE
ஏப் 10, 2025 17:21

Dummy Nimmi with British FM


VSMani
ஏப் 10, 2025 15:55

இந்தியாவில் இருக்கிற பல்கலைக்கழகம்கள் போதாதா ? இதில் பிரிட்டன் பல்கலைக்கழகம்கள் வேண்டுமா? இந்தியாவில் இருக்கிற பல்கலைக்கழகம்களை பிரிட்டன் கொண்டு சென்று இந்தியாவுக்கு அந்நியச்செலாவணி சம்பாதியுங்கள்


venugopal s
ஏப் 10, 2025 13:48

பாவம் இங்கிலாந்து மக்கள், அங்கும் இனி எல்லாவிதமான வரிகளும் உயர்ந்து கஷ்டப்படப் போகின்றனர்!


chennai sivakumar
ஏப் 10, 2025 12:52

இங்கிலாந்து பல்கலைகள் வேண்டும். ஆனால் ஆங்கிலம் நகி. சரிதானே மேடம்


Thetamilan
ஏப் 10, 2025 11:16

இந்தியர்களின் திறமை அவமானப்படுத்தப்பட்டுள்ளது.


xyzabc
ஏப் 10, 2025 10:49

கொள்ளையர்கள் இருக்கும் இடம் தமிழகம்.


अप्पावी
ஏப் 10, 2025 10:45

இங்கிலாந்து பல்கலைக் கழகங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து பேரை இந்திக்கு மாத்தி அந்நிய அடையாளங்களை அழிப்போம்.


Mecca Shivan
ஏப் 10, 2025 08:14

அதெல்லாம் சரி.. GST சட்டத்தில் வியாபாரிகளுக்கு எதிராக ஆனால் உங்கள் அதிகாரிகள் லஞ்சம் வாங்க எதுவாக உள்ள ஓட்டைகளை அடைப்பது பற்றி யோசிக்கும் திறன் உள்ளதா அமைச்சரே ?


ஜெயக்குமார்,இராமநாதபுரம்
ஏப் 10, 2025 09:46

திருந்த வாய்ப்பில்லை.


Thetamilan
ஏப் 10, 2025 07:56

மொத்தத்தில் யாராக இருந்தாலும் ட்ரில்லியன் டாலர் கொள்ளையர்களின் திருவடியில் சமர்ப்பணம்.


V Venkatachalam
ஏப் 10, 2025 11:44

30000 கோடி யாருக்கும் தெரியாமல் அடித்தார்களே. அதை வயிறு எரிந்து வெளிக் கொண்டு வந்த பி டி ஆர் தியாகராஜன் அவர்களை பத்தி பேசு. நன்கொடையாக கிடைத்த பணத்தை பத்தி அப்பறம் பேசலாம். தான் திருட்டை மறைக்க ரொம்ப சவுண்டு உடறது திருட்டு தீய முக வோட வழக்கம்.


முக்கிய வீடியோ