மேலும் செய்திகள்
அமெரிக்காவில் விமானங்கள் மோதல்
04-Oct-2025
டாக்கா: வங்கதேசத்தில், டாக்கா சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் விமான போக்கு வரத்து முற்றிலுமாக முடங்கியது. நம் அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஷ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. அங்கு, இறக்குமதி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ பரவி மளமளவென எரியத் துவங்கியது. இதன் காரணமாக, விமான நிலையம் முழுதும் புகை மண்டலமானது. தீயணைப்பு படையினர் மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். தீ காரணமாக, டாக்கா விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. புறப்படத் தயாராக இருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சென்னை - வங்கதேசம் விமான சேவை பாதிப்பு சென்னையில் இருந்து டாக்காவுக்கு நேற்று பகல் 1:30 மணிக்கு புறப்பட்டு சென்ற, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், அவசரமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டா விமான நிலையத்தில் தரையிறங்கியது. மேலும், சென்னையில் இருந்து டாக்காவுக்கு நேற்று பகல் 2:40 மணிக்கு, 'பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்' விமானம், 187 பயணியருடன் புறப்பட தயாராக இருந்தது. டாக்கா விமான நிலைய தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், பயணியர் அனைவரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். பல மணிநேரம் கடந்தும் டாக்காவுக்கு இடையேயான விமான போக்குவரத்து சீராகாததால், பயணியர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
04-Oct-2025