எல்.பி.ஜி., டேங்கர் கப்பலில் தீ: ஏமன் அருகே இந்தியர்கள் 23 பேர் மீட்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
டிஜிபூட்டிசிட்டி: ஏமன் அருகே கேமரூன் நாட்டை சேர்ந்த எல்பிஜி டேங்கர் எம்வி பால்கன் கப்பலில் தீ பற்றிய சம்பவத்தில் இந்திய பணியாளர்கள் 23 பேர் மீட்கப்பட்டனர்.கேமரூன் நாட்டை சேர்ந்த எல்பிஜி டேங்கர் கப்பல் நேற்று (அக்டோபர் 19) ஏமன் நாட்டின் ஏடனுக்கு தென்கிழக்கே சுமார் 113 கடல் மைல் தொலைவில் ஜிபூட்டிக்கு செல்லும் வழியில் பயணித்தபோது திடீரென தீ பற்றியது. கப்பலில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) முழுமையாக நிரப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தீ பற்றி அதை தொடர்ந்து டேங்கர் வெடிக்கத் தொடங்கியது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய கடற்படையின் ஆஸ்பைட்ஸ் அதிகாரிகள் கூறுகையில், அந்த கப்பலில் இருந்த இந்தியர்கள் 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், இரண்டு பணியாளர்கள் இன்னும் காணவில்லை. மீட்கப்பட்ட இந்தியர்கள் ஜிபூட்டியன் கடலோர காவல்படையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர் என்றனர்தீ பற்றியதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. விசாரணை மற்றும் ஆய்வு நடந்து வருகிறது.