வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Nada Rajan
மே 18, 2025 12:30
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்
எல்சிங்கி: பின்லாந்தில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.எஸ்தோனிய தலைநகர் தாலினில் ஒன்றாகப் புறப்பட்ட 2 ஹெலிகாப்டர்கள் பின்லாந்தின் யூரா விமான நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். ஒரு ஹெலிகாப்டரில் இரண்டு பேரும், மற்றொன்றில் 3 பேரும் இருந்தனர் என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்