மேலும் செய்திகள்
ஆஸி.,யைத் தொடர்ந்து மலேசியாவிலும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
7 hour(s) ago | 2
கனடா போலீசார் தேடிய இந்திய வம்சாவளி வாலிபர் கைது
8 hour(s) ago
உலகக்கோப்பை மகளிர் கபடி: இந்திய அணி சாம்பியன்
8 hour(s) ago | 9
ஹனோய்: தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், தாய்லாந்து, மலேஷியாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால், இயல்பு வாழ்க்கை கடுமையாக ஸ்தம்பித்துள்ளது. வியட்நாமின் மத்திய பகுதியான குவாங் திரி முதல் லாம் டோங் வரை சுமார், 800 கி.மீ., தொலைவுக்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியான டாக் லாக்கில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள். காங் ஹோவா, லாம் டோங், கியா லாய், டானாங், ஹூவே, குவாங் திரி உள்ளிட்ட மா காணங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 91 பேர் பலி வியட்நாமில் மட்டும் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேரை காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள் ளது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதால், ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வியட்நாமின் டாக்லாக் காபி உற்பத்திக்கு பிரசித்தி பெற்றது. தற்போது பெய்த கனமழையால் காபி தோட்டங்கள் நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. இதனால், காபி தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகிஉள்ளது. வெள்ள பாதிப்பால் 4,457 கோடி ரூபாய் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 300 ஆண்டு தாய்லாந்தில் தெற்கு மாகாணங்களில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதில் 5 பேர் பலியாகினர், 4 பேர் படுகாயமடைந்தனர். சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சோங்லா மாகாணத்தின் முக்கிய வணிக நகரமான ஹாட் யாயில் ஒரே நாளில் 34 செ.மீ., மழை பதிவானது. இது கடந்த, 300 ஆண்டுகளில் இல்லாத மழை பதிவு என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 13,000 பேர் மலேஷியாவின் 9 மாநிலங்களில் கனமழை தீவிரமடைந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 12,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
7 hour(s) ago | 2
8 hour(s) ago
8 hour(s) ago | 9