உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாட்டில் ஜனநாயகமே இல்லை; யாத்திரை செல்ல வேண்டிய கட்டாயம்: சொல்கிறார் ராகுல்

நாட்டில் ஜனநாயகமே இல்லை; யாத்திரை செல்ல வேண்டிய கட்டாயம்: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'நாட்டில் ஜனநாயக அமைப்புகள் செயல்பாட்டில் இல்லை. இதனால் யாத்திரை செல்லும் கட்டாயம் ஏற்பட்டது' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார்.3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல், வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் யாத்திரை துவங்குவதற்கான முடிவு மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசியத்தால் ஏற்பட்டது. நாட்டில் ஜனநாயக அமைப்புகள் செயல்பாட்டில் இல்லை. ஜனநாயகத்தில் பொதுவாக வேலை செய்யும் அனைத்து பிரிவும் வேலை செய்யாததால், அரசியல் ரீதியாக யாத்திரை செல்ல கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். மக்களை நேரடியாக சந்திப்பதை தவிர வேறு வழியில்லை என்று கட்சி உணர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்தது.

நாடு முழுவதும் நடக்கணும்!

தனிப்பட்ட அளவில், இது நான் எப்போதும் செய்ய விரும்பிய ஒன்று. நான் சிறு வயதில் இருந்தே, ஒரு நாள், நாடு முழுவதும் நடக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. காங்கிரஸுக்கும் ஆளும் பாஜகவுக்கும் இடையிலான போட்டி இந்தியாவின் எதிர்காலத்திற்கான போட்டி. இந்தியாவில் ஒரு சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

உற்பத்தித் துறை

அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு, குறிப்பாக விவசாயம், நிதி மற்றும் வரிவிதிப்பு போன்ற துறைகளில், சமூகத்தின் பல்வேறு துறைகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் உற்பத்தித் துறையில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் . இந்தியா உலகின் உற்பத்தியாளர் என்ற தனது பங்கை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டது. உற்பத்தியைப் புறக்கணித்து, சேவைப் பொருளாதாரத்தை மட்டும் நடத்தினால், உங்களால் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியாது. உலகப் பொருளாதாரத்தில், குறிப்பாக உற்பத்தித் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தனது பங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

M Ramachandran
செப் 12, 2024 10:30

கோமளி பல சமயத்தில் மன நோயாளி போல் சிரிப்பவர்கள் இவர்கள் பேசுவதை கேட்கும் அநேகர் பலரும் அவர்களும் மன நோயாளிகளய் மாறி விடுகிறார்கள்


Rajendra
செப் 11, 2024 16:25

அவர் வெளிநாட்டு பயணம் போவதே நம் தேசத்தை மற்றும் PM மோடிஜியை இழிவுபடுத்துவதே முக்கிய வேலை. நம் நாடு உண்மையில் விடுதலை பெற்றதே 2014 ஆண்டுதான். அதன்பிறகே வளர்ச்சி கண்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இது ராகுலால் சகிக்க முடியாத காரணமாக தான் அவர் இப்படி செய்கிறார் என்பது தான் உண்மை. பொதுவாக ஒருவர் நல்லது செய்து பிரபலமாகிவிட்டால் பலருக்கு பிடிக்காது அதுவும் எதிர்கட்சிகளுக்கு.


PREMASEKHAR HARRIS SARASAMMA
செப் 11, 2024 15:46

அட ராகுல். பாரதத்தை பாஜக ஆள்வதால் தான் நீ காஷ்மீருக்கு சுதந்திரமாகச் சென்று திரும்ப முடிகிறது.தீவிரவாத தேசவிரோத பிரிவினைவாதிகளின் காலில் வீழ்ந்து கிடந்தது காங்கிரஸ் .நீயெல்லாம் மோடி என்ற தேசபக்தனைப் பற்றி பேசலாமா


ஆரூர் ரங்
செப் 11, 2024 15:17

இதுவே கட்சிக்கு இறுதி யாத்திரையாக இருக்கும்.


Sivasankaran Kannan
செப் 11, 2024 14:31

இந்த பேர்வழி - உபயோகமான எதையும் பேசாது.. குடும்ப வாரிசு என்ற தகுதி தவிர ஒரு அறிவும் கிடையாது.. ஒரு மாநில முதலமைச்சராக கூட இருக்க தகுதி இல்லை. முடிந்தால் கர்நாடக முதல்வராக ஒரு வருடம் இருந்து ஏதாவது சாதிக்க முயலட்டும்.. சித்த ராமையா 1000 மடங்கு மேல் என்று எல்லோரும் ஒப்பு கொள்வார்கள்..


C.SRIRAM
செப் 11, 2024 14:15

எங்கு ஜனநாயகம் உள்ளதோ அங்கு செல் பப்பு .... அதாவது பாகிஸ்தானுக்கு அல்லது சீனாவுக்கு... இந்த கூமுட்டை மீது தேசத்துரோக வழக்கு பதிந்து விசாரணை துவக்குவது நல்லது அல்லது நேஷனல் ஹெரால்ட் விசாரணை தொடங்குவது நல்லது


Sridhar
செப் 11, 2024 13:37

இவனோட ஒரே குறிக்கோள் அந்த 230 சீட்டும் இவனாலதான் வந்ததுன்னு நிலைநாட்டனும். அதுவும் இவன் செஞ்ச பாதயாத்திரையின் பலனாகத்தான் வந்ததுன்னு எல்லோரும் நினைக்கணும். காலு மேல காலு போட்டு சும்மா பிரதமர்ங்கற நினைப்புல உக்காற்ரான் பாருங்க, இதே நினைப்போட கூட்டணி கட்சிகளோட தொகுதி பங்கீட்டு பேச்சுக்கு போவும்போது எல்லாமே புட்டுக்கப்போவுது. இப்பவே ஆப்பு கட்சியோட புட்டுக்கிச்சு. இனி ஒவ்வொண்ணா கழண்டுக்கும். அப்புறம் மீண்டும் பரிதாபமா முதல்லேந்து ஆரம்பிப்பானா? அதுவரை ஜெயிலுக்கு போகாம இருக்கணுமே


Mettai* Tamil
செப் 11, 2024 12:14

ஆமா நாட்டில் ஜனநாயகம் சீரழிவுக்கு உங்க முதலாளி தான் காரணம் .காங்கிரஸ் தலைவராக நேதாஜி தேர்வான பிறகு , உங்க முதலாளி யின் பிடிவாதத்தால் நேதாஜியே பதவியை விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. நம்ம நாட்டு பிரச்சனையை வெளி நாட்டில் பேசுவது எந்த வகையான அரசியல் என்று தெரியவில்லை.


Selvasubramanian Chelliah
செப் 11, 2024 12:00

செய்தியை எதுக்குலே போடுறே


Selvasubramanian Chelliah
செப் 11, 2024 11:57

இப்போல்லாம் ...போயிட்டே இருக்கு


புதிய வீடியோ