உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேமென்ட் இன்னும் வரல... வங்கதேச பிரீமியர் லீக் விளையாட சென்ற வெளிநாட்டு வீரர்கள் சோகம்

பேமென்ட் இன்னும் வரல... வங்கதேச பிரீமியர் லீக் விளையாட சென்ற வெளிநாட்டு வீரர்கள் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: பி.பி.எல்., கிரிக்கெட் தொடரில் விளையாடச் சென்ற வெளிநாட்டு வீரர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் டிக்கெட்டுக்களை வழங்காமல் அணி நிர்வாகம் இழுத்தடித்தால், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரைப் போன்று வங்கதேசத்தில் பி.பி.எல்., எனப்படும் டி.20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டர்பர் ராஜ்ஷாகி அணி, வீரர்களுக்கு உரிய ஊதியத்தையும், வெளிநாட்டு வீரர்களுக்கான விமான டிக்கெட்டையும் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தானின் முகமது ஹாரிஸ், ஆப்கானிஸ்தான் அப்தாப் ஆலம், வெஸ்ட் இண்டீஸின் மார்க் தெயல், ஜிம்பாப்வே ரியான் புர்ல், வெஸ்ட் இண்டீஸின் மிகுல் கம்மின்ஸ் ஆகியோருக்கும் உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கடந்த 11 நாட்களாக தினப்படியும் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால், வெளிநாட்டு வீரர்கள் டாக்காவில் உள்ள ஓட்டலிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டர்பர் ராஜ்ஷாகி அணி நேற்றைய ஆட்டத்துடன் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், வீரர்களின் அழைப்புகளுக்கும் பதிலளிக்காமல் இருந்து வருகிறது. வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை ஊதியத்தை கொடுக்காவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கதேச விளையாட்டு ஆலோசகர் ஆசிப் மகமுது, ராஜ்ஷாகி அணி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kumar Kumzi
பிப் 03, 2025 08:46

பூவாவுக்கே பிச்சை எடுக்கிறவர் எப்பிடிப்பா உங்களுக்கு சம்பளம் குடுப்பார்


Indhuindian
பிப் 03, 2025 06:15

பணமா முக்கியம் உடம்புலே உசுரு இருந்தா சம்பாதிச்சுக்கலாம் அங்கேந்து ஓடி போடுங்கோ இல்லேன்னா அவங்க என்ன பண்ணுவாங்களோ தெரியாது. ஜனங்க சோத்துக்கே லாட்டரி அடிக்கிறாங்க இந்திய அரசாங்கம்தான் அரிசி பிச்சை போட்டுது. இந்த மாதிரி தேசத்தோட அக்ரீமெண்ட் போட்டு விளையாடினாலோ அல்லது வர்த்தகம் பண்ணினாலோ முதல்லே காசை கையிலே வைக்க சொல்லுங்க இல்லேன்னா வேணாம்னு சொல்லிடுங்க


J.V. Iyer
பிப் 03, 2025 05:14

உங்களிடமுள்ள பணத்தை ஆட்டை போடாமல் இருந்தார்களே என்று சந்தோஷப்படுங்கள். இந்த நாடு பயங்கரவாதிகள் கையில் இருந்தால் எப்படி உருப்படும்?


Karthik
பிப் 02, 2025 22:21

நல்லா நெம்பிகிட்டே இரு.. வரும்.. ஆனா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை