உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி

காத்மாண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி இன்று( செப்.,12) இரவு பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அந்நாட்டில் பிரதமர் ஆன முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.நமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j3u311ww&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட், தலைமை செயலகம், உச்சநீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இல்லங்களை சூறையாடினார். நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்து தேர்தல் நடக்கும்வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமரை தேர்வு செய்யும் பணி நடந்தது. காத்மாண்டு மேயர் பாலென் ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் ஆகியோரை போராட்டக் குழுவினர் பரிந்துரைத்தனர். இதில், பாலென் ஷா தனக்கு விருப்பம் இல்லை என அறிவித்து விட்டார். சுசீலா கார்கி, மற்றும் குல்மான் கிஷிங் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வதில் மாணவர்கள் அமைப்பினர் இடையே குழப்பம் நிலவி வந்தது.இந்நிலையில் அதிபர், ராணுவம், மாணவர் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இன்று இரவு அவர் பதவியேற்றுக் கொண்டார். தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்கும் வரை, அவர் இந்தப்பதவியில் இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

K.Ravi Chandran, Pudukkottai
செப் 13, 2025 09:46

அம்மா. எல்லோருக்கும் தாய் போல மங்களகரமா இருக்கீங்க. இனிமேலாவது நேபாள மக்கள் வாழ்வில் விடிவு பிறக்கட்டும். தர்மம் தழைத்தோங்கி இந்திய, நேபாள உறவு வலுப் பெறட்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 13, 2025 07:46

நேபாளத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதே அந்த நாட்டில் உள்ளவர்களுக்கு நல்லது. சிக்கிம் எப்படி தனி நாடாக இருந்து தற்போது இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறி தற்போது நன்றாக உள்ளதோ அது போல நேபாளமும் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறுவதே அதற்கு நன்மை பயக்கும்.


Moorthy
செப் 13, 2025 07:01

நேபாள் நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்


Svs Yaadum oore
செப் 12, 2025 21:51

நேபாளத்தின் சுசீலா கார்கி இந்திய காசி ஹிந்து பல்கலையில் படித்தவர் .... நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியும் , உலகின் ஒரே ஹிந்து நாடாக நேபாளம் முன்பு இருந்தது போல மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் .....2008இல் நேபாள் செகுலர் நாடு என்று அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு மிஷனரி சதி வேலைகள் துவக்கம் ....முன்பு போல் மன்னராட்சி அறிவித்து இந்த மதம் மாற்றும் கும்பலை அங்கிருந்து விரட்ட வேண்டும் ..


Sivagiri
செப் 12, 2025 21:06

2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட புரட்சி , மோடியை கொண்டு வந்தது , . . . அதே போல , ஒரு ஆளை தாங்களும் கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் புரட்சி செய்து பார்க்கின்றன . . .சிலோன் , பங்களாதேஷ் , பர்மா , நேபாளம் , இங்கிலாந்து , பிரான்ஸ் , ஜப்பான் , தாய்லாந்து , மாலத்தீவு , என்று வரிசையா , நமக்கும் ஒரு மோடி கிடைச்சிற மாட்டாரா-ன்னு என்னென்னவெலாமோ செஞ்சு பாக்குறாங்க , கடைசியாதான் தமிழனுக்கு மண்டைல ஏறும் போல , , ,அவ்வளவு போதை . . .


JaiRam
செப் 12, 2025 20:46

விரைவில் திருட்டு திராவிட கூட்டம்


தியாகு
செப் 12, 2025 20:11

நேபாள மக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவார்கள் போல. இங்கே டுமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மட்டும் மன்னர் ஆட்சி கணக்கா ஐம்பது வருடங்களாக தமிழக மக்களின் வரி பணத்தை ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் கொள்ளை அடித்து தங்கள் குடும்பத்திற்கும், குறுநில மன்னர்கள் போல இருக்கும் மந்திரிகள் குடும்பத்திற்கும், கட்சியில் இருக்கும் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்பு குடும்பங்களுக்கும் சொத்து சேர்க்கிறது. இதெல்லாம் கண்கூடா தெரிந்தும் டுமிழர்கள் மீண்டும் அவர்களுக்கே வாக்களித்து அழகு பார்க்கிறார்கள்.டுமிழர்கள் வாழ பழகிக்கொண்டார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


Tamilan
செப் 12, 2025 19:51

மோடியின் சாதனையா? போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சாதனையா ?


தியாகு
செப் 12, 2025 20:16

நேபாளத்தில் கட்டுமர திருட்டு திமுகவில் இருப்பது போல தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை மூர்க்க உடன்பிறப்புகள் எவனும் இல்லை. அதனால் அந்த சாதனை.


திகழும் ஓவியம், Ajax Ontario
செப் 13, 2025 07:12

. ஸ்டிக்கர் ஒட்டி பிழைப்பு நடத்தும் பிரச்சனை ஆகிவிடும் என பயம். நீ கலக்கு சித்தப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை