உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து; இத்தாலியில் 4 பேர் பரிதாப பலி

கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து; இத்தாலியில் 4 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மிலன்: இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், சுற்றுலா பயணிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் விரிகுடா மற்றும் வெசுவியஸ் மலை காட்சிகளுக்காக கேபிள் கார் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அங்கு சீசன் என்பதால் கேபிள் கார் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.இந்நிலையில், நேப்பிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற கேபிள் காரில், கேபிள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். தற்போது கேபிள் கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !