உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரான்ஸ் பார்லி., தேர்தல்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

பிரான்ஸ் பார்லி., தேர்தல்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

பாரிஸ்: பிரான்ஸ் பார்லிமென்டிற்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு தொங்கு பார்லிமென்ட் அமைந்துள்ளது.பிரான்சில் அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. 577 இடங்களை கொண்ட அந்நாட்டு பார்லிமென்டிற்கு ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டிக்கு 289 இடங்களில் வெற்றி பெற வேண்டும். முதல் கட்டமாக நடந்த தேர்தலில், வலதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றது. இதனால், அக்கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு நிலைமை மாறியது. ஆனால், பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, பிரான்ஸ் சோசியலிஸ்ட் கட்சி, பசுமை அரசியல் கட்சி ஆகியன அடங்கிய இடதுசாரி கூட்டணி 180 இடங்களையும், அதிபர் மேக்ரானின் சென்ட்ரிஸ்ட் கட்சி 160 இடங்களையும், வலதுசாரி கூட்டணி 140 இடங்களையும் பெற்றுள்ளன. எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனையடுத்து அங்கு தொங்கு பார்லிமென்ட் அமைந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 09, 2024 09:16

விடியலை அனுப்பி வைத்தால் பிரச்சினைகளை தீர்த்து விடுவார். பிரஞ்சு தெரியாததால் போகவில்லை.


Sankar Ramu
ஜூலை 08, 2024 16:48

இலவசம் வழங்கி மெஜாரிட்டி வந்திருக்கலாம். நாட்டுக்கு நல்லது செய்ய வந்தவங்க போல எங்க உதையநிதிய விட்டிருந்தா நகை கடன் வாங்கிக்கோங்கன்னு ??


Palanisamy Sekar
ஜூலை 08, 2024 16:23

பிரான்ஸ் உலகத்திலேயே அதிக ஆர்ப்பாட்டங்களை சந்திக்கபோகிற நாடுகளின் பட்டியலில் முதன்மையாக உள்ளது. காரணம் அங்கே பல அகதிகளுக்கும் குடியுரிமையை தாராளமாக வழங்கியதுதான் காரணம். எதிர்காலத்தில் பிரான்ஸ் மோசமான சமூக பிரச்சினைகளையும் குண்டு வெடிப்புகளை சந்திக்கபோகிறது. கம்யூனிஸ்ட் கூட்டணியில் இருப்பதால் ஆட்சி அதிகாரம் அங்கே செல்லும் என்றால் நிச்சயம் பிரான்ஸ் ஏகப்பட்ட தலைவலிகளை சந்தித்தே ஆகணும்.


kulandai kannan
ஜூலை 08, 2024 16:07

Though the right wing party had the largesy vote share in first round, left parties forged unholy alliances and came on top in the second round.


Rassi
ஜூலை 08, 2024 14:56

கழகத்திடம் ஐடியா கேட்டு இருந்தால் மெஜாரிட்டி கிடைத்திருக்கும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ