உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலினத்தை நிரூபிக்க பிரான்ஸ் அதிபர் மனைவி முடிவு

பாலினத்தை நிரூபிக்க பிரான்ஸ் அதிபர் மனைவி முடிவு

பாரீஸ்: ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் மனைவி பிரிஜிட். இவர் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வலதுசாரி ஆதரவு அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ், 'பிரிஜிட் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்' என, விமர்சித்தார். இதையடுத்து, ஓவன்ஸ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில், பிரிஜிட் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடந்து வரும் சூழலில், பெண் என்பதை நிரூபிக்க அறிவியல்பூர்வ ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்க உள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான பிரிஜிட், பாலினம் குறித்த வதந்திகளை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, பிரான்சில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை பரப்பிய இரண்டு பெண்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அவர் வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி