உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக்கை சீர்குலைக்க நாசவேலை: பாரிஸ் ரயில் தடங்களில் தீ வைப்பு

ஒலிம்பிக்கை சீர்குலைக்க நாசவேலை: பாரிஸ் ரயில் தடங்களில் தீ வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ் : பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன், அந்நாட்டின் அதிவிரைவு ரயில் தடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததை அடுத்து, ரயில் சேவை முற்றிலுமாக முடங்கியது.ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியை காண திட்டமிட்டிருந்த எட்டு லட்சத்திற்கும் அதிகமான பயணியர், பாரிஸ் வந்தடைய முடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவித்தனர். இதற்கு நாசவேலை காரணம் என கூறப்படுகிறது.

சிக்னல் சேதம்

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நேற்று இரவு நடந்தது. இதற்காக பாரிஸ் முழுதும் விழா கோலம் பூண்டுள்ளது. வார இறுதி நாள் என்பதால், பிரான்சை சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும், ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண மக்கள் பாரிஸ் வந்தவண்ணம் உள்ளனர். பாரிஸ் நகரத்தை, பிரான்ஸ் உடன் மட்டுமின்றி, பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் டி.ஜி.வி., என்ற அதிவேக ரயில்வே சேவை, அந்நாட்டில் முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது.பாரிசில் உள்ள மிக முக்கியமான மான்ட்பர்னாஸ் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள அட்லான்டிக், நார்டு மற்றும் எஸ்ட் வழித்தடங்களில் உள்ள மூன்று இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நேற்று அதிகாலைநடந்துள்ளன.இதையடுத்து, பாரிஸ் நகரத்தை நோக்கி வரும் பல்வேறு அதிவேக ரயில் தடங்களில் போக்கு வரத்து தடைபட்டது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த தீ வைப்பு தாக்குதலில், சில ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் சிக்னல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், அதிவேக ரயில் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. இவற்றை சரிசெய்ய, குறைந்தது வார இறுதி நாட்கள் முழுதும் தேவைப்படும் என கூறப்படுகிறது.ஒரே நேரத்தில் பல இடங்களில் நடப்பட்ட இந்த தாக்குதலால், பாதி ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தேசிய ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரயில்களை மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விட்டாலும், கணிசமான எண்ணிக்கையில் ரயில் சேவைகளை ரத்து செய்ய வேண்டியிருக்கும் என, பிரான்ஸ் அதிவேக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பயணியர் சிரமத்தை தவிர்க்க, ரயில் பயணங்களை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணை

இது குறித்து பிரான்ஸ் போக்குவரத்து துறை அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் கூறுகையில், ''ஒலிம்பிக் துவக்க விழாவையும், வார இறுதி நாட்களையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. போக்குவரத்தை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார். இந்த தாக்குதலுக்கு நாசவேலை காரணம் என தெரிய வந்தாலும், அதில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில் சேவை பாதிப்பால் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramarajpd
ஜூலை 27, 2024 07:18

இதே பேட்டர்ன் தான் எல்லா நாடுகளிலும், விவசாயிகள் போர்வையில் லட்சக்கணக்கான டிராக்டர்களை வைத்து கொடூரம்.


krishnan
ஜூலை 26, 2024 21:57

பிரான்சில் கிளர்ச்சியாளர்கள் தேர்தல் முடிவினால் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள். இரும்பு கரம் கொண்டு அடக்க பட வேண்டியவர்கள். டில்லியில் கிளர்ச்சி சர்தார் விவசாய்க்கால் 67 armoured vehcle மாடல் வண்டிகளை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். டெல்ளி உள் அனுமதித்தால் அவ்வளவு தான் . army கூட பெருசாக ஒன்னும் செய்யாது . விஷ கெமிக்கல் கோதுமை விளைச்சலுக்கே இந்த கலாட்டா. டெல்லியில் எல்ல பேரணிக்கு தடை வேண்டும் . ஆன்டி india மக்கள் ஆப்கனிஸ்தானுடன் சேர்ந்து கொள்ளட்டும் .


Mohan
ஜூலை 26, 2024 19:35

சரியாய் போச்சு இந்தியா ல தான் இந்த கூத்துன்னா இப்போ உலகம் பூராவும் இப்படித்தான் போல இருக்குது ..சமத்துவம் செகுலரிஸ்ம் மனித உரிமை எல்லாம் பேசிட்டு அமைதி மார்கத்திக்கு முட்டு குடுத்தா அவுங்க வேலைய செவ்வனே செய்து முடிப்பாங்க ..இனியாவது உலக நாடுகள் முழிச்சிகிட்ட சரி ..ஆனா ஒன்னு வாழத்தகுந்த நாடுகள் ரெண்டே ரெண்டுதான் இருக்குது இஸ்ரேல், சீனா இவுங்க கிட்ட எவனும் வாழ் ஆட்ட முடியாது


GMM
ஜூலை 26, 2024 19:33

கிளர்ச்சி, போராட்டம் என்றால் வன்முறை மூலம் தன் ஒரு பக்க கருத்தை திணிப்பது. இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி. மூன்று படிக்காரர் கருத்து மட்டும் ஏற்கப்பட்டது. கிளர்ச்சி செய்யாமல் லட்ச கணக்கான மாணவர்கள் கருத்து கேட்டு இருந்தால், உண்மை தெரிந்து இருக்கும். தற்போது தமிழர்கள் பிற மாநிலங்களில் சைகை காட்டி வாழ வேண்டி இருக்காது. கிளர்ச்சி நொடியில் ஒடுக்க வேண்டும்.


K.Muthuraj
ஜூலை 26, 2024 18:28

அவர்களின் சட்டங்களே குற்றவாளிகளை மயிலிறகால் அடிப்பது போன்ற தண்டனைகளையே கொடுக்கும். இதிலே எங்கே கடுமையான தண்டனை.


சிவம்
ஜூலை 26, 2024 18:12

என்ன, கடுமையான தண்டனையா! கொடுக்க முடியுமா உங்களால். அப்புறம் தேர்தலில் எங்கள் ஓட்டு கிடைக்காது. பரவாயில்லையா. இது போன்ற நிகழ்வில் என்ன பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியாவில் உள்ள மாநிலத்தில் அதாவது தமிழ் நாட்டிற்கு சென்று பயின்று வாருங்கள்.


Anand
ஜூலை 26, 2024 17:31

இங்குள்ள காங்கிரஸ் போல அங்கேயும் கிளம்பிவிட்டார்கள் போலிருக்கு.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி