உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசா போர் நிறுத்தம் எதிரொலியாக, பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணியை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். அவர்கள், செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இரண்டு கட்டங்களாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபரில் இருந்து கடுமையான போர் நடந்து வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். 'அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்; பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும்' என, டிரம்ப் கெடு விதித்திருந்தார்.இதையடுத்து, எகிப்தின் ஷர்ம் அல் - ஷேக் நகரில், எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தம் வாயிலாக மூன்று நாட்களாக பேச்சு நடந்தது. அதில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது. காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம், எகிப்தில் இன்று கையெழுத்தாகவுள்ளது. தற்போது காசா போர் நிறுத்தம் எதிரொலியாக, பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணியை ஹமாஸ் படையினர் தொடங்கி விட்டனர். முதல்கட்டமாக 7 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.முதலில் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் பெயர் விபரம் பின்வருமாறு:* காலி பெர்மன்* ஜிவ் பெர்மன்* ஈட்டன் ஆபிரகாம்* ஓம்ரி மீரான்* மதன் ஆங்ரெஸ்ட்* ஆலன் ஓஹெல்* கில்போவா டலாஸ்இவர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் குடும்பத்தினரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் 13 பேர் விபரம் பின்வருமாறு:* ஆபிரகாம் குபெர்ஷ்டீன், *எய்தார் டேவிட், * யோசெப்-சாய்ம் ஓஹானா, * செகேவ் கல்போன், * அவினாடன் * எல்கானா போஹ்போட், * மாக்சிம் ஹெர்கின், * நிம்ரோட் கோஹன், * மதன் ஜங்காக்கர், * ஈடன் ஹார்ன், * ஆபிரகாம் * ரோம் பிராஸ்லாவ்ஸ்கி, * ஏரியல் குனியோ * டேவிட் குனியோஇவர்கள் காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவது காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தின் மிகப்பெரிய வெற்றியாக உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனிய கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VenuKopal, S
அக் 13, 2025 19:14

அடி அந்த அளவுக்கு. ஹமாஸ் முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தீவிரவாதத் ஒழிப்பார்கள்


Rathna
அக் 13, 2025 18:24

1400 வருடங்களாக இஸ்ரேலியர்கள் சொல்ல முடியாத சித்தரவதையை அனுபவித்து உள்ளார்கள். 1400 வருடங்களுக்கு முன்னால் அவர்கள் வாழ்விடங்களில் இருந்து இன மற்றும் மத காரணங்களுக்காக தங்கள் நாட்டில் இருந்து துரத்தப்பட்டனர். சிலுவை போர், இஸ்லாமிய போர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஐரோப்பிய, ருசியா போலந்து, அமெரிக்கா நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். ஹிட்லரால் ஜெர்மனியில் பட்ட இன அழிப்பு கொடுமை அதிகம். மற்ற நாடுகளிலும் பட்ட கொடுமை அதைவிட அதிகம். அவர்களது அறிவு மற்றும் இன ஒற்றுமையால் 1948ல் தனி நாடு உண்டாக்கப்பட்டது. இப்போதைய இஸ்ரேலியர்கள் பழைய தணிந்து போகும் மக்கள் அல்ல. ஐரோப்பிய, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ருசியா, ஜெர்மனிய கலப்பினம். வாங்கிய அடியில் பல நூறு மடங்கு ஹமாஸ் தீவிரவாத அமைப்பிற்கு கொடுக்கும் அறிவும் வல்லமையும் உள்ளவர்கள். இஸ்ரேலியர்களிடம் இந்தியா கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. அது நம்மை தீவிரவாத கும்பல்களிடம் இருந்து காப்பாற்றும்.


R. SUKUMAR CHEZHIAN
அக் 13, 2025 16:52

காசாவை இஸ்ரேல் முழுமையாக பிடித்து அங்குள்ள இசுலாமிய ஜிகாதி கும்பல்களை முற்றிலுமாக துரத்தி அடித்தால் தான் எதிகாலத்தில் இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க முடியும். முன்பு இந்தியா செய்த பெரிய தப்பு இந்த இஸ்லாமிய ஜிகாதி கும்பல்களை நம்பியதன் விளைவுதான் நமக்கு சொந்தமான பகுதிகளான இன்றைய பாகிஸ்தான் வங்கதேச பகுதிகளை இழந்து பல லட்சகணக்கான ஹிந்துகள் கொலை செய்யப்பட்டு பெண்கள் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு அல்லது வலுகட்டாயமாக மதமாற்ற பட்டு இன்றளவும் இவர்களால் பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம், இது போன்ற தப்பை இஸ்ரேல் செய்யாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


SUBRAMANIAN P
அக் 13, 2025 16:38

இது அத்தனைக்கும் காரணம் எங்கள் தானைத்தலைவர், அமைதிகுலத்திலகம், வேந்தற்கு வேந்தன், மன்னவருக்கெல்லாம் மன்னவன், எங்கள் தென்னவன், காந்தி பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த அகிம்சாவாதி கோபாலபுரகுலக்கொடி, அன்பின் சிகரம் தங்கத்தின் தங்கம் புரட்சிப்புயல், கொளத்தூர் தொகுதி கோமகன் அண்ணனுக்கெல்லாம் அண்ணன் அப்பா என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஸ்டாலின் அவர்களே என்பதை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தெரிவித்துக்கொள்கிறேன்.


Perumal Pillai
அக் 13, 2025 13:34

இஸ்ரேல் கண்ணில் படாமல் இவர்களை இந்த தீவிரவாதிகள் இவ்வளவு காலம் எங்கு எப்படி ஒளித்து வைத்திருந்தனர்? தீவிரவாதிகளை அவர்கள் எங்கு இருந்தாலும் அழித்து ஒழிக்க வேண்டும் .


Indian
அக் 13, 2025 13:26

நியாயமா டிரம்ப் கு தான் நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும். நார்வே நோபல் டீம் useless எல்லாம் பாலிடிக்ஸ் .


Field Marshal
அக் 13, 2025 15:58

ஐக்கிய நாடுகள் இதை விட பெரிய ஒரு விருது அறிவிக்கலாமே


சமீபத்திய செய்தி