உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 180 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்; நால்வரை கொன்ற மாணவரின் தந்தைக்கு... அறிவித்தார் நீதிபதி!

180 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்; நால்வரை கொன்ற மாணவரின் தந்தைக்கு... அறிவித்தார் நீதிபதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ஜார்ஜியாவில் துப்பாக்கிச் சூடு நடத்தி நால்வரை கொன்ற, 14 வயது மாணவனின் தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 180 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்' என நீதிபதி கியூரி மிங்கிள் தெரிவித்தார். அமெரிக்காவின் ஜார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், 4 பேரின் உயிரை பறித்தவர், 14 வயது மாணவர் என்றும், கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர் சக மாணவர்கள், இருவர் ஆசிரியர்கள் என தெரிந்தது. மாணவனின் தந்தையான 54 வயதுடைய கொலின் கிரே மீது படுகொலை, இரண்டாம் நிலை கொலை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் மகனுடன், தந்தை ஆஜர் ஆனார்.

180 ஆண்டுகள்

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தனது 14 வயது மகனுக்கு துப்பாக்கியைக் கொடுத்த குற்றத்திற்காக, அதிகபட்சமாக 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்கொள்ள நேரிடும். இரண்டாம் நிலைக் கொலைக் குற்றத்திற்காக 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். அதிகபட்ச தண்டனை என்பதால் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடும் என்றும் நீதிபதி கியூரி அதிரடி அறிவித்தார்.

இந்தாண்டில் இதுவரை 46 சம்பவம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணம். அதுவும் பள்ளி செல்லும் மாணவர்கள், துப்பாக்கியை கொண்டு செல்வதும் அடிக்கடி நடக்கிறது. இந்தாண்டில் மட்டும் இதுவரை, 46 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்க பள்ளிகளில் நடந்துள்ளன. ஜார்ஜியாவில் நடந்தது, 45வது சம்பவம். அதற்கு பிறகும் கூட, இன்னொரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்து விட்டது.இதற்கு தீர்வு தெரியாமல், அமெரிக்க போலீசாரும், அரசியல் கட்சியினரும் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

God yes Godyes
செப் 09, 2024 21:30

அல்லார் கையிலும் துப்பாக்கி கொடுத்தாக்கா ஒருத்தனை ஒருத்தன் சுட்டுகிட்டு சாவானுக. திட புத்தியில்லாத பசங்க கிட்ட துப்பாக்கி இருந்தாக்கா அவர்களே சுட்டுகிட்டு சாவானுக.


God yes Godyes
செப் 09, 2024 21:22

பெரியவர்கள் பூமி சுழற்சியை வைத்து மனித ஆயுளை 120ஆண்டுகள் என வரையறை செய்துள்ள போது ஓரு குற்றவாளி 120 ஆண்டுகளுக்கு மேல் எப்படி உயிர் வாழமுடியும்.இவன்களும் இவன்களது சட்டமும்.


Anonymous
செப் 07, 2024 12:47

துப்பாக்கி யார் வேண்டுமானாலும் வாங்க முடியும் என்ற நிலையை மாற்றி பாருங்கள், துப்பாக்கி சூடு குறைய வாய்ப்புளளது,


theruvasagan
செப் 07, 2024 11:37

நம்ம ஊரில் சின்ன பசங்க கையில் வண்டியை கொடுக்கும் அப்பனுகளுக்கும் இந்த தண்டனை தேவை.


Shekar
செப் 07, 2024 10:39

நம்ம ஊர்ல இப்படி ஒரு யுவர் அனர் கூட இல்லையே. இவ்வளவு குறைந்த காலத்தில் எவ்வளவு சிறப்பான நீதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை