உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெள்ளியாவது கொடுங்க...: வினேஷ் போகத் அப்பீல் மனு இன்று விசாரணை

வெள்ளியாவது கொடுங்க...: வினேஷ் போகத் அப்பீல் மனு இன்று விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ் : தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் செய்துள்ள மேல்முறையீடு இன்று(ஆக.,8) விசாரணைக்கு வருகிறது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. மல்யுத்த போட்டியில் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், 29, முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் இருமுறை வீராங்கனைகளின் எடை சோதிக்கப்பட்ட போது வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், சர்வதேச மல்யுத்த சங்கம் தகுதி நீக்கம் செய்தது.இதனால் வினேஷின் பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது. 140 கோடி இந்திய மக்களின் நெஞ்சமும் தகர்ந்தது. இந்நிலையில் தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து கோர்ட் ஆப் ஆர்பிட்ரேசன் ஆப் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் தனக்கு வெள்ளி பதக்கம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தாமரை மலர்கிறது
ஆக 08, 2024 02:03

வெள்ளியும் கிடையாது. இரும்பு இல்ல மண்சட்டியிலு கூட கிடையாது. ஒலிம்பிக் விளையாட வந்த இடத்தில தின்னுட்டு உடம்ப ஏத்திக்கிட்டு இருக்கே. கிளம்பு கிளம்பு. பிரிஜ் பூசனை கைவிட்டதன் விளைவை இந்தியா சந்தித்து வருகிறது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ