உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசு ஊழியர் வெளிநாடு செல்லத்தடை: ரகசியங்களை பாதுகாக்க சீனா நடவடிக்கை

அரசு ஊழியர் வெளிநாடு செல்லத்தடை: ரகசியங்களை பாதுகாக்க சீனா நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: அரசு ரகசியங்களை பாதுகாக்க, சீனா கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கம்யூனிச நாடான சீனாவில், அரசு கட்டுப்பாடுகள் அதிகம்.டிவி, சமூக வலைதளம், இன்டர்நெட் எல்லாவற்றிலும் அரசின் கண்காணிப்பு இருக்கும்.அரசு ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில், இப்போது அரசு ஊழியர்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* அரசு அதிகாரிகளுக்கு, ரகசியங்களை பாதுகாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.* அரசு ரகசியங்களை கையாளும் ஊழியர்கள், முன் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.* ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து விலகிய பிறகும், ரகசிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகள் ஆயுள் முழுவதும் நீடிக்கும்.* ரகசியங்களை பாதுகாக்க, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் முக்கிய ஆவணங்களை பார்க்க வேண்டும். ஆவணங்களை நகலெடுக்கவோ, பதிவிறக்கவோ முடியாது.* ரகசியங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.புதிய விதிமுறைகள் செப்டம்பர் மாதத்துக்குள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P. VENKATESH RAJA
ஜூலை 31, 2024 14:22

அரசு ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்


P. VENKATESH RAJA
ஜூலை 31, 2024 14:21

அருமையான வாய்ப்பு பயன்படுத்தி கொள்ள வேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை