உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசு நிர்வாகம் முடக்கம்: விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்கிறார் டிரம்ப்

அரசு நிர்வாகம் முடக்கம்: விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மிரட்டி பணம் பறிக்கும் பணிநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவோம் என அரசு நிர்வாகம் முடக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் அரசு நிர்வாகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க, அந்நாட்டு பார்லிமென்டால் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டும். பார்லிமென்டின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறாவிட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது. இதனால், அத்தியாவசியமற்ற சேவைகள் மற்றும் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படும். இது பணி முடக்கம் என்று அழைக்கப்படுகிறது.அந்த வகையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா பார்லிமென்டில் நிறைவேறவில்லை. இதையடுத்து, அக்டோபர் 1ம் தேதி முதல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. 31 நாட்களாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கும் நிலையில், 7 பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 62 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.இந்நிலையில் அரசு நிர்வாகம் முடக்கம் குறித்து சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: நினைவில் கொள்ளுங்கள், குடியரசுக் கட்சியினரே, பணிநிறுத்தம் உட்பட எதுவாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சியினர் முடிவுக்குக் கொண்டுவருவார்கள். சண்டையிடுங்கள், போராடுங்கள்,வெற்றி கிடைக்கும். மிரட்டி பணம் பறிக்கும் பணிநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவோம். மேலும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை மிகவும் நல்லதாக்குவோம். இந்த ஜனநாயக அரசியல்வாதிகள் மீண்டும் ஒருபோதும் அமெரிக்காவை அழிக்க வாய்ப்பில்லை. குடியரசுக் கட்சியினரே புத்திசாலித்தனமாக இருங்கள், வெற்றி பெறுங்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவோம்!

மற்றொரு பதிவில் அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: நைஜீரிய அரசாங்கம் கிறிஸ்தவர்களைக் கொல்வதைத் தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா உடனடியாக நைஜீரியாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்திவிடும்.அதுமட்டுமின்றி அமெரிக்கா தாக்குதல் நடத்தும். இந்தக் கொடூரமான அட்டூழியங்களைச் செய்யும் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்கப்படுவர். சாத்தியமான நடவடிக்கைக்குத் தயாராகுமாறு நமது படையினருக்கு இதன் மூலம் அறிவுறுத்துகிறேன். அமெரிக்காவின் தாக்குதல் வேகமாகவும், கொடூரமாகவும் இருக்கும்என நைஜீரிய அரசினை எச்சரிக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

சிறந்த சந்திப்பு

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான எனது சந்திப்பு, எங்கள் இரு நாடுகளுக்கும் ஒரு சிறந்த சந்திப்பாக அமைந்தது. இந்த சந்திப்பு அமைதி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gokul Krishnan
நவ 02, 2025 16:31

இந்திய அரசு எக்ஸ் ட்விட்டர் தளத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் அளவுக்கு அதிகமாக இந்தியா மட்டும் இந்தியர்களுக்கு எதிராக வன்ம மற்றும் வெறுப்புணர்வு பரப்பபட்டு வருகிறது இது முக்கியமான விஷயம்


Rajasekar Jayaraman
நவ 02, 2025 11:39

இதெல்லாம் ஒரு உலக வல்லரசு இதில் ஊருக்கெல்லாம் நாட்டாமை மகா கேவலம்.


arunachalam
நவ 02, 2025 11:17

அதான் சொல்லிட்டாருல்ல சீக்கிரம் அமெரிக்காவை முடிச்சு விட்டுடுவார்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 02, 2025 09:23

எங்க தொளபதி டுமீலு நாட்டை கொண்டு போன லெவலுக்கு நீங்களும் கொண்டு போயிட்டீங்க .....


S.suresh
நவ 02, 2025 09:21

தன் சொந்த நாட்டை கவனிக்கத் தெரியவில்லை. இந்த அழகுகுக்கு மற்ற நாட்டு விஷயங்களில் மூக்கை நுழைப்பது. சொந்த நாட்டு ஜனங்கள் இவனை தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் வருத்தப்படுவார்கள் நிச்சயமாக.


Ramesh Sargam
நவ 02, 2025 09:18

விரைவில் மொத்தமாக மூட, டிரம்ப் தன்னால் ஆன எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்.


Kasimani Baskaran
நவ 02, 2025 09:11

பலர் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது அபத்தம். துரதிஷ்டவசமாக சிலர் சம்பளம் கிடையாது என்று தெரிந்தும் வேலை செய்கிறார்கள்.


புதிய வீடியோ