உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துப்பு ஒண்ணும் கிடைக்கலை; டிரம்ப் கொலை முயற்சி வழக்கை கைகழுவியது அமெரிக்க போலீஸ்!

துப்பு ஒண்ணும் கிடைக்கலை; டிரம்ப் கொலை முயற்சி வழக்கை கைகழுவியது அமெரிக்க போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் டிரம்பை கொலை செய்ய நடந்த முயற்சி குறித்து விசாரித்த எப்.பி.ஐ., போலீசார், வழக்கில் உருப்படியாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று கைவிரித்து விட்டனர்.கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த போது தாமஸ் மாத்யூ குரூக்ஸ், 20, துப்பாக்கியால் சுட்டார். காது பகுதியில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மாத்யூ குரூக்ஸை போலீசார் அதே இடத்தில் சுட்டுக் கொன்றனர். தாமஸ் வீட்டில் எப்.பி.ஐ.., படையினர் சோதனை மேற்கொண்டனர்.

60 முறை...!

இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 29) எப்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை துப்பாக்கியால் சுட்ட, 20 வயதான தாமஸ் க்ரூக்ஸ் பல மாதங்களாக சதி தீட்டி வந்துள்ளார். டிரம்ப் பேரணியில் தாமஸ் க்ரூக்ஸ் கலந்து கொள்ள, ஜூலை மாதம் துவக்கத்தில் பதிவு செய்வதற்கு முன், அப்போதைய போட்டியாளரான ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் பற்றிய தகவல்களை 60 முறைக்கு மேல் இணையதளத்தில் தேடி உள்ளார்.டிரம்பை கொல்ல முயன்ற தாமஸ் ஜூலை மாதம் பென்சில்வேனியா நடந்த ஒரு பெரிய கூட்டத்த்தில் கல்நது கொண்டு டிரைனிங் எடுத்துள்ளார். ஜூலை துவக்கத்தில் டிரம்ப் பேரணி அறிவிக்கப்பட்டபோது க்ரூக்ஸ் அதிக கவனம் செலுத்தி, இதனை கொலை செய்ய ஒரு வாய்ப்பாக கருதியுள்ளார். டிரம்பை படுகொலை செய்ய க்ரூக்ஸை தூண்டியது யார் என்பதும், என்ன காரணம் என்பது குறித்து கண்டறியவில்லை.

வெளிநாட்டு சக்தி

க்ரூக்ஸ் ஒரு வெளிநாட்டு சக்தியால் இயக்கப்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் தங்களுக்கு கிடைக்கவில்லை. அவரது தொடர்புடை இடங்களில் சட்டவிரோத போதைப்பொருள் உள்ளிட்ட எதுவும் இல்லை.

வெடிபொருட்கள்

அவரது மனநிலையைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ளப்பட்டது. தனது காரில் பல வெடிபொருட்களை விட்டுச் சென்ற க்ரூக்ஸ், 2019 ஆம் ஆண்டிலேயே வெடிகுண்டு கூறுகள் பற்றிய தகவல்களைத் இணையதளத்தில் தேடியுள்ளார். தாமஸ் எந்த சித்தாந்த அடிப்படையிலும் செயல்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம், கொலையாளியின் நோக்கம் பற்றி எந்த ஒரு உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை என்பதை அமெரிக்க போலீசார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஆக 29, 2024 12:27

துப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் குற்றவாளி அப்பொழுதே தனது தண்டனையை அனுபவித்துவிட்டான். அவன் அப்பொழுதே சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டான். இனி துப்பு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன...?


Shekar
ஆக 29, 2024 12:02

உலகத்தில உள்ள எல்லா போலீஸும் நம்ம ஸ்காட்லாந்து போலீஸ் போல்தான் போலிருக்கிறது. நம்ம ஸ்காட்லாந்து டீம்கூட இப்படித்தான், சாதிக், கிருஷ்ணன், ஜெயராம், வேங்கை வயல் அப்படின்னு பல விசயத்தில் முழிசிக்கிட்டு இருக்காங்க. அமெரிக்கா மாதிரி இப்பிடி ஒரு மாதத்தில் ஃபைலை மூட அதிகாரம் கொடுக்கணும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 29, 2024 12:00

கலைஞரின் குடமுருட்டி குண்டு உருட்டுக்கு நன்றி ..... தமிழகத்துக்கு மட்டுமல்லர் .... கலைஞர் உலகினுக்கே வழிகாட்டி ....


Duruvesan
ஆக 29, 2024 11:55

பாஸ் இப்போ தெரிதா நம்ம போலீஸ் குக்கர் வெடிச்சிடுச்சி சொன்னதுக்கு பொங்குனீங்களே?


சமீபத்திய செய்தி