உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குருநானக் தேவின் 556வது ஜெயந்தி விழா: பாக்., செல்லும் 2,000 சீக்கியர்

குருநானக் தேவின் 556வது ஜெயந்தி விழா: பாக்., செல்லும் 2,000 சீக்கியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லாகூர் : சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 556வது ஜெயந்தி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாஹிப் குருத்வாராவுக்கு 2,150 இந்திய சீக்கியர்கள் வழிபட செல்கின்றனர்.குருநானக் தேவ் பிறந்த இடம் பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ளது. நங்கனா சாஹிப் குருத்வாரா எனப்படும் இங்கு நவம்பர் 5 துவங்கி ஒரு வாரம் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்காக 2,150 இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் சீக்கியர்களுக்கு விசா வழங்கியுள்ளது.இந்திய சீக்கியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள வாகா எல்லை வழியாக நங்கனா சாஹிப் குருத்வாரா செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Field Marshal
நவ 04, 2025 15:50

பாகிஸ்தான் நீலம் பள்ளத்தாக்கில் சாரதா பீடம் கவனிப்பாரின்றி இருக்கு


பேசும் தமிழன்
நவ 03, 2025 19:43

குருநானக் பிறந்த ஊரை... பாகிஸ்தான் நாட்டுக்கு விட்டு கொடுத்த பாவிகள் நேரு தலைமையிலான கான் கிராஸ் கட்சியினர்..... அவர்களை சீக்கிய மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.


R. SUKUMAR CHEZHIAN
நவ 02, 2025 23:37

குருநானக் தேவ் பிறந்த புன்னிய ஸ்தலம் காட்டுமிராண்டி கூட்டங்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தான் பக்கம் இருப்பது நமக்கு பெருத்த அவமானம் அந்த புனித ஸ்தலத்தை நாம் மீட்டெடுத்து புனித படுத்த வேண்டும். லவ குச பிறந்த லாகூரையும் மீட்க வேண்டும். ஜெய் ஹிந்த்.


Field Marshal
நவ 02, 2025 23:21

கலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடாவி லிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வந்து அப்பாவிகளின் மண்டையை கழுவுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை