உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் குற்றச்சாட்டு

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியானதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதார அமைச்சகம் இன்று கூறியதாவது:இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 68,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் இன்று 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை காசாவிற்கு அனுப்பியது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நாசர் மருத்துவமனையில் இந்த உடல்களை ஒப்படைத்தது. இஸ்ரேல் திருப்பி அனுப்பிய மொத்த உடல்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில்,ஹமாஸ் நேற்று ஒப்படைத்த மற்றொரு பணயக்கைதியின் உடல் எலியாஹு மார்கலித் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது. பாலஸ்தீனிய போராளிக்குழு காசா பகுதியில் இடிபாடுகளுக்கு அடியில் மேலும் உடல்களைத் தேடி வருகிறது. மேலும், அந்தப் பகுதியில் கூடுதல் உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.இதற்கிடையே இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், போர் நிறுத்தத்தை மீறியதாகவும் ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
அக் 18, 2025 21:17

எங்கே அந்த நோபல் பரிசுக்காரார் உனக்கு எப்படி அய்யா நோபல் பரிசு கொடுப்பார்கள் இன்னும்மும் இந்த நப்பாசை இருந்தால் உனக்கு ஏமாற்றமே மிஞ்சும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை