உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் 20 அம்ச திட்டத்தை ஏற்ற ஹமாஸ்; இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம்

டிரம்ப் 20 அம்ச திட்டத்தை ஏற்ற ஹமாஸ்; இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம்

நியுயார்க்: டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்றுக் கொண்ட ஹமாஸ், தங்கள் வசமுள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-காசா போர் இடையே 2023ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 65,000க்கும் அதிகமானோர் பலியாகினர். இடையே போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நிறுத்தத்திற்கான 20 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை நெதன்யாகு ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பும் ஏற்றுக் கொள்ள, அமெரிக்க குழுவினருடம் எகிப்தில் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந் நிலையில், அதிகாரத்தை கைவிடுவது, எஞ்சிய பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில திட்டங்களை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வரவும், பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேலிய படைகளை முழுமையாக திரும்ப பெறுவதற்கும் ஏற்ற வகையில் அணைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுவிக்க தயார் என்றும் கூறி இருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளில் பட்டியலை ஹமாஸ் சமர்ப்பித்து உள்ளது. மேலும், இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 20 பிணைக்கைதிகள், உயிரிழந்த 27 பிணைக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்கவும் ஹமாஸ் முடிவு செய்துள்ளது.ஹமாஸின் இந்த முடிவை தொடர்ந்து, எஞ்சிய பிணைக்கைதிகள் அக்.13 அல்லது அக்.14 ஆகிய தேதிகளில் விடுவிக்கப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.ஹமாஸின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ்வில், மக்கள் கொண்டாட்டங்களை தொடங்கி இருக்கின்றனர். அங்குள்ள ஹோஸ்டேஜஸ் சதுக்கத்தில் திரண்டு பாடியும், ஆடிக்கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 10, 2025 09:07

டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்றுக் கொண்டது ஹமாஸ். இது போதாது. எங்கள் திமுக தலைவர், காசா மக்களுக்காக தினம் தினம் கண்ணீர் சிந்தும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.


புதிய வீடியோ