உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / யாஹ்யா சின்வார் மரணத்தை உறுதி செய்தது ஹமாஸ்: பிணைகைதிகளை விடுவிக்க நிபந்தனை

யாஹ்யா சின்வார் மரணத்தை உறுதி செய்தது ஹமாஸ்: பிணைகைதிகளை விடுவிக்க நிபந்தனை

காசா: ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. காசாவில் போரை நிறுத்தினால் மட்டுமே பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இவர்கள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் போரில், காசாவில் 40,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர். இதை இஸ்ரேல் அரசு உறுதி செய்தது. யாஹ்யா சின்வர் கடந்த ஆண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர்.யாஹ்யா சின்வர் உயிரிழந்ததை அந்த அமைப்பின் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா உறுதி செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். படைகள் முற்றிலும் திரும்பப்பெற வேண்டும். சிறையில் உள்ள எங்கள் அமைப்பினர் விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவரை, இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

mohammed Rafeek Rafeek
அக் 20, 2024 19:26

காசாவில் 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டது சரியா? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?


Venkateswaran Rajaram
அக் 21, 2024 11:57

பொதுமக்கள் பாவம்தான் ஆனால் முதலில் எச்சரிக்கையை செய்யாமல் முதலில் குண்டு போட்டு கொடூரமாக இஸ்ரேல் மக்களை இந்த பயங்கரவாதிகள் கொன்ரது கோழைத்தனம்


Nallavanaga Viruppam
அக் 21, 2024 14:50

நேருக்கு நேர் நின்று தாக்கி இருந்தால் இவ்வளவு உயிர்கள் சேதம் இருக்காது. குண்டை எரிந்து விட்டு அப்பாவி மக்கள் பின்னால் ஒளிந்து கொள்ளும் செய்கை தான் இதற்கு காரணம்.


தமிழ்வேள்
அக் 19, 2024 15:00

250 பிணைக்கைதிகள் உயிர் பெரிதல்ல... வெறியர்களை ஈவு இரக்கம் இல்லாமல் போட்டு தள்ளி விடவும்.... இல்லையேல் அடங்காது..


Natarajan Ramanathan
அக் 19, 2024 01:23

உலகில் உள்ள ஒவ்வொரு மூர்க்கணும் கொல்லப்படும்வரை தீவிரவாதம் ஒழியாது.


Pandi Muni
அக் 18, 2024 22:03

மூர்க்கனுங்க முட்டாளா இருக்கட்டும் அடி முட்டாளா இருந்து சாகணுங்கறத யாராலுமே தடுக்க முடியாதுதான். சும்மா கிடந்தவன் மேல ஆயிரக்கணக்கில ராக்கெட் குண்டுகளை வீசி கொன்னு போடுவானுங்களாம் கெடச்சவனுங்கள பினாயா வச்சிக்குவானுங்களாம். போட்டு தள்ளாம இவனுங்கள விட்டுருணுமாம். மூர்க்க தீவிரவாதம் கடைசி மூர்க்கன் கொள்ளப்படும் வரை இருக்கும்.


Nallavanaga Viruppam
அக் 18, 2024 21:54

அடுத்த வீடியோ போட உயிர் வேணுமே வாழ்த்துக்கள்


முக்கிய வீடியோ