உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் துணை தலைவர் லெபனானில் கொலை: உச்சம் தொடும் போர் பதற்றம்

ஹமாஸ் துணை தலைவர் லெபனானில் கொலை: உச்சம் தொடும் போர் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரி உயிரிழந்ததாக லெபனான் மற்றும் பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் போர் தீவிரமாகும் என தெரிகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் சூழலில் ஹமாஸ் போராட்டக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் துணை தலைவருமான சலே அல்-அரூரி, மேற்குக் கரையில் உள்ள குழுவிற்கு தலைமை தாங்கி வந்தார். இந்நிலையில், நேற்று (ஜன.,2) பெய்ரூட்டில் இஸ்ரேலிய ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்தால், அது மத்திய கிழக்கு மோதலை பெரிதுப்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், சலே அல் அரூரி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூரி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கக் கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பாலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மோத் அப்பாஸ் உடன் நல்லுறவு கொண்டிருந்த அரூரி, போட்டி குழுக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்று வந்தார். இதனிடையே, லெபனானில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் குறிவைத்தால் பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உறுதியளித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஜன 04, 2024 00:52

ஈரானின் இரட்டை குண்டு வெடிப்பு: பலி 103. தீவிரவாதத்தை ஆதரித்தால் இப்படித்தான் அழியவேண்டி இருக்கும்.


Sridhar
ஜன 03, 2024 16:37

இன்னுமும் வீதிகளில் இரங்கி போராடும் நிலையில் இருக்கிறார்களா? இஸ்ரேல் இவ்வளவு நாட்களாக என்னதான் செய்துகொண்டிருக்கிறது?


K.Muthuraj
ஜன 03, 2024 18:24

அது வெஸ்ட் பேங்க் எனப்படும் பாலஸ்தீனம்.


பேசும் தமிழன்
ஜன 03, 2024 12:27

தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ...லெபனான் ....சிரியா ...ஈரான் ...போன்ற நாடுகளை முதலில் தாக்கி அழிக்க வேண்டும்....அப்போது தான் தீவிரவாதம் ஒழியும் !!!


Anand
ஜன 03, 2024 11:49

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி பலஸ்தீன தீவிரவாதிகளை ஒரு வழி செய்து முடிக்கணும்.....


Rajathi Rajan
ஜன 03, 2024 11:40

இது வருமா வராதா ????


கிருஷ்ணதாஸ்
ஜன 03, 2024 10:34

இது கொலையில்லை. தீவிரவாத ஒழிப்புதான்.


K.Muthuraj
ஜன 03, 2024 10:12

.... போட்டி குழுக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்று வந்தார்... இது உண்மையே. இவர்களிடம் என்று ஒற்றுமை சார்ந்த செயல்பாடுகள் கிடையாது. மறைந்த யாசர் அராபத் கூட தம் வாழ்நாளில் பாதி பலஸ்தீன குழுக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த செலவழித்தார்.


thonipuramVijay
ஜன 03, 2024 09:55

Sweet edu, kondadu ...


santhanam
ஜன 03, 2024 10:06

கரெக்ட் ..ப்ரோ...சரியாக சொன்னீர்கள் ...


Duruvesan
ஜன 03, 2024 09:35

சபாஷ் .மகிழ்ச்சி ,தொடரட்டும் வேட்டை


மேலும் செய்திகள்







புதிய வீடியோ