உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!

6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: இன்று (பிப்.,22) திட்டமிட்டப்படி 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளில், இதுவரை 2 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.கடந்த 2023ம் ஆண்டு அக்., 7 ல் இஸ்ரேலிய ராணுவத்தினரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அது முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. இதன் பிறகு அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. இதனடிப்படையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ixfm9scw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளில், இதுவரை 2 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. இவர்கள் இருவரும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் எலியா கோஹன், ஓமர் ஷெம் டோவ், ஓமர் வென்கெர்ட், ஹிஷாம் அல்-சயீத் ஆகிய 4 பேர் இன்று விடுவிக்கப்பட உள்ளனர். இன்னும் சிலர் ஹமாஸ் அமைப்பு பிடியில் உள்ளனர் அவர்களை விடுவிக்க முயற்சி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bye Pass
பிப் 22, 2025 23:46

கத்தார் ஷேய்க் மற்றும் இரான் ஆயதுல்லா கோமாளி ரெண்டு பேரையும் சரியாக விசாரித்தால் பிரச்னை தீரும்


RK
பிப் 22, 2025 18:30

அமைதி மார்க்கம் அமைதியை.... கடைபிடிக்கலாமே....


Varathappan Parthasarathy
பிப் 22, 2025 16:01

மிக அருமை.


சமீபத்திய செய்தி