உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டம்; பிணைக்கைதிகள் 4 பேர் சடலமாக ஒப்படைப்பு

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டம்; பிணைக்கைதிகள் 4 பேர் சடலமாக ஒப்படைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் வரை காத்திருந்த ஹமாஸ் நான்கு இஸ்ரேல் பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த 2023 அக்., 7ல் எதிர்பாராத தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 48,319 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஐ.நா., முயற்சியால் ஜன.19 முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் அரசு பாலஸ்தீன கைதிகளையும், ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டனர்.இந்நிலையில், காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் நான்கு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கடைசி பரிமாற்றம் இதுவாகும். போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில், மொத்தம் இஸ்ரேல் பிணைக்கைதிகள் 33 பேரும், பாலஸ்தீனர்கள் 2 ஆயிரம் பேரும் பரிமாறி கொள்ளப்பட்டனர். 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Karthik
பிப் 27, 2025 17:00

இனி உங்க ஆட்டத்த ஆரம்பிங்க நெதன்.. யா.. ஊ..


Sankare Eswar
பிப் 27, 2025 15:22

இந்த கோழை நரிகளை போட்டு தள்ளுங்க இசுரவேல்


shakti
பிப் 27, 2025 14:18

அமைதி மூர்க்கம்


Ganesan Rengaswamy
பிப் 27, 2025 11:10

இசுரேல் அளவு நமக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்திருந்தால் நாம் இன்று முன்னேறிய நாடக இருந்திருப்போம். நம்மிடம் உற்பத்தி திறனும் இல்லை. தலைமை பண்பும் இல்லை. கொரியா அளவு கூட நம்மால் உயர முடியவில்லை. சிந்திக்க வேண்டும்.


Nellai tamilan
பிப் 27, 2025 10:33

இஸ்ரேல்காரன் தீவிரவாதிகளை வெளியில் அனுப்பிவிட்டு பரலோகம் அனுப்புவான்


Barakat Ali
பிப் 27, 2025 09:02

இஸ்ரேலுக்கு மீண்டும் வெறியேற்றுகிறார்கள் ...


Nandakumar Naidu.
பிப் 27, 2025 08:49

இவனுகளை எல்லாம் உயிரோடு வைக்கவே கூடாது. உலகமே இவர்களால் அமைதி இல்லாமல் இருக்கிறது.


Laddoo
பிப் 27, 2025 08:01

கொரோனா கூட்டம் அழித்தொழிக்கப்பட வேண்டிய மூரக்கக் கும்பல். மனித குலத்துக்கே சாபக் கேடு. வாழ்க இசுரேலின் தனித் தன்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை