உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பின்லேடன் மகன் சாகவில்லை: மீண்டும் தாக்குதலுக்கு தயாராகி வரும் அல்கொய்தா ?

பின்லேடன் மகன் சாகவில்லை: மீண்டும் தாக்குதலுக்கு தயாராகி வரும் அல்கொய்தா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் உள்ளான் என திடுக் தகவல் வெளியாகியுள்ளது.2001-ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன். அமெரிக்க படையால் தேடப்பட்டு வந்த நிலையில், 2011ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் கிராமம் ஒன்றில் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் அமெரிக்காவின் ‛‛கடற்படை சீல்ஸ்'' தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக்கொன்று, உடலை கடலில் வீசியது.இந்த வீடு பின்லேடனின் மூன்றாவது மனைவியின் மகனான ஹம்சா பின்லேடனின் வீடு எனவும், ஒசாமா பின்லேடன் சுட்டுகொல்லப்பட்ட போது ஹம்சா பின்லேடன் அங்கு இல்லை. எனவும். 2019-ம் ஆண்டு ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்தது. இதனை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. இதனால் முரணாக ஊடகங்களில் செய்தி வெளி வந்தன. எனினும் ஹம்ஸா பின்லேடனை உலகளாவிய பயங்கரவாதியாக வகைப்படுத்தியது அமெரிக்கா.இந்நிலையில் ‛‛தி மிர்ரர் ' ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் உள்ளான் என ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் எதிர்ப்பு ராணுவ அமைப்பான என்.எம்.எப். என்ற அமைப்பு தெரிவிக்கிறது என அவை (தி மிர்ரர்) கூறி உள்ளது.2021 ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி முடிவுக்கு வந்து தலிபான்கள் கைப்பற்றிய போது 'பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கான பயிற்சி மையம் அமைத்து 450 பாகிஸ்தானியர்கள் ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அரணமாக இருந்து வருகின்றனர். அவனது கட்டளையின் கீழ், அல் கொய்தா மீண்டும் ஒருங்கிணைத்து வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது' .மேலும் ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல் கொய்தா விவகாரங்களை கவனித்து வரும் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஹம்சா பின்லேடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராமகிருஷ்ணன்
செப் 14, 2024 10:26

பயங்கரவாதிகள், தீவிரவாதிகளில் கூட வாரிசுகளுக்கு தான் முதல் உரிமை. அதனால் தான் திராவிட கட்சிகளின் கொள்கை வாரிசு அடிப்படையில் உள்ளது. திமுக ஒரு தீவிரவாத கூட்டம் என்பதற்கு இதுவே சான்று.


Palanisamy T
செப் 14, 2024 03:48

இவர்கள் திருந்தவும் மாட்டார்கள் thirunthap


தமிழ்வேள்
செப் 13, 2024 19:59

மீண்டும் குவாண்டனாமோ கேம்ப் துவக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம்... சவூதி அரேபியா ஜமால் கஷோகி ஐ கொன்ற அதே முறையில் ரோட்டரி ஸா பயன்படுத்தி இந்த மாதிரியான ரத்த தாகம் பிடித்த, வெறி ஊறிய பயங்கரவாதி ஒவ்வொரு பயலையும் காலி செய்து விட வேண்டும்.... மிருகங்களை மிருகத்தனமாகத்தான் வேட்டையாடுதல் வேண்டும்..


Palanisamy T
செப் 14, 2024 04:05

இவர்கள் திருந்தவுமாட்டார்கள். திருந்தப் போவதுமில்லை. இவனது தந்தை அன்று பாகிஸ்தானில் நீண்ட நாட்களாக பாதுகாப்பாக தங்கியிருந்தது எப்படி இந்திய அரசுக்கு தெரியாமல் போனது வன்முறை கலாச்சாரத்தை கையிலே எடுத்தவர்களுக்கு அந்த வன்முறையே அவர்களுக்கு பதில் சொல்லும் காலம் மீண்டும் வருமென்று அவர்களுக்கு தெரியாதா? என்ன போதனையை எங்கு இவர்கள் படித்தார்களோ


Balaji
செப் 14, 2024 05:37

நீங்க சொல்றது புது மாதிரி இருக்கே. அப்பா போதை மருந்து, சாராயம் குடிக்க வெச்சி கோல்ராங்களே அவங்களுக்கு இதே மாதிரி தண்டனை தானா?


புதிய வீடியோ