உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு வங்கதேச அரசு கடிதம்

ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு வங்கதேச அரசு கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் வங்கதேச அரசு கேட்டுக் கொண்டுள்ளது.வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஆன 77 வயதான ஹசீனா, மாணவர்கள் போராட்டங்களால் ஆட்சியை இழந்து, நாட்டை விட்டு வெளியேறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bjkxcckd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஆகஸ்ட் 5 முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஹசீனா, அவரது மாஜி அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.இதனை தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவிற்கு திருப்பி அனுப்ப, இந்தியாவில் உள்ள தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வங்க தேச இடைக்கால அரசு இன்று தெரிவித்துள்ளது.நீதித்துறை நடவடிக்கைக்காக, ஹசீனாவை திரும்ப அழைக்க விரும்புவதாக, இந்திய அரசிற்கு வாய்மொழியாக ஒரு குறிப்பு அனுப்பியுள்ளோம் என்று தற்போதுள்ள வெளியுறவு அமைச்சர் தவுகித் ஹூசைன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.முன்னதாக உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் கூறுகையில், ஹசீனாவை நாடு கடத்துவதற்கு வசதியாக வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.டாக்காவிற்கும் புது டில்லிக்கும் இடையில் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தம் ஏற்கனவே இருப்பதாகவும், அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்பக் கொண்டுவரப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sudhakar Sundaram
டிச 24, 2024 12:53

ஓட்டுக்காக நீங்கள் எதையும் பேசுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ... நீங்கள் எல்லோருக்கும் பொதுவானவர் என்றால் .. நான் ஒரு அன்பு மிக்க மனிதன்.. அல்லது நான் ஒரு இந்தியன் அல்லது நான் ஒரு தமிழன் என்று தான் சொல்லி இருக்க வேண்டும் .. கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு .. மதம் மற்றும் ஜாதி எதற்கு ..


AMLA ASOKAN
டிச 24, 2024 12:08

ஜனநாயகத்திற்கு விரோதமாக அடக்குமுறை கொண்டு நடத்தும் ஆட்சியாளர்கள் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணங்கள் ஹசினா , ராஜபக்ஷே , அசாத் பஷார் போன்ற அராஜக பேர்வழிகள் . இவர்கள் நாட்டை விட்டு தப்பித்தோம் பொழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடியவர்கள், அல்லது மக்களால் விரட்டி அடிக்க பட்டவர்கள். இவர்களால் உயிர் இழந்த லட்சக்கணக்கான ஆன்மாக்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் சாபம் இவர்களை சாகும் வரை விடாது . ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த இவர்கள் இன்று மற்றொரு நாட்டில் தஞ்சம் அடைந்து இலவச இருப்பிடம் & உணவு சாப்பிடுகிறார்கள். எல்லாம் தலைவிதி


N.Purushothaman
டிச 24, 2024 06:51

அப்படி எல்லாம் ஒப்படைக்க முடியாது ....இடைக்கால ஆட்சியை காலி பண்ணி யூனுஸை நாட்டை விட்டே திரும்பவும் துரத்தி ,காலிதா ஜியாவை மீண்டும் உள்ளே வைத்து அதன் பின் தான் அவர் அங்கு வருவார் ....ரொம்ப பேசினால் மியான்மரின் அராக்கன் ஆர்மி உள்ளே புகுந்து துவம்சம் பண்ணும் ...


AMLA ASOKAN
டிச 23, 2024 21:43

இந்தம்மா மட்டும் CAA சட்டத்தை மீறி எப்படி ஒரு முஸ்லிமாக இந்தியாவிற்குள் நுழைந்தது ? ஏன் இந்தம்மா ஏதாவது ஒரு முஸ்லீம் நாட்டிற்கு செல்லலாமே ? இந்தம்மா தனது அரசியல் எதிரிகளை கொலை பண்ணாத நாளே இல்லை . செய்த குற்றத்திற்கு சிறையோ தூக்கு தண்டனையோ தான் கிடைக்கும் . நல்லவர் போல் நடிக்கும் அராஜக ஆட்சியாளர் . இவர் தூக்கி எறியப்பட்ட பின்னணியை பற்றி வலை தளங்களில் பார்த்தால் இவரது வன்மம் தெரியும் .


N.Purushothaman
டிச 24, 2024 06:59

இணையத்துல வருகிற கருத்தை எல்லாம் கணக்குல எடுத்துகிட்டா பைத்தியம் தான் பிடிக்கும் ...இந்தியாவிடம் மோதல் போக்கை கடைபிடித்து இப்போது அங்கு அரிசி கையிருப்பு சேப்டி ஸ்டாக் கீழே போயிடுச்சி ..மின்சாரத்திற்கு பணம் கட்டாததால் அதுவும் குறைக்கப்பட்டு உள்ளது ....அதனால் பின்னலாடை தொழில் கடும் சரிவை சந்தித்து இந்தியாவில் பின்னலாடை தொழில் மீண்டும் வேகமெடுத்து உள்ளது ....சில தினங்களுக்கு முன்பு பங்காளதேஷ விடுதலைக்கு முழு காரணம் அந்நாடு தானே தவிர இந்தியா ராணுவ உதவி மட்டும் தான் செய்தது என்கிற தொனியில் பேசியது இந்தியா ராணுவ வீரர்களின் தியாகத்தை மழுங்கடிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது ....இன்னும் நிறைய இந்த மாதிரி வரும் ...காரணம் மத வெறி கும்பல் தற்போது யூனுஸை இயக்கி கொண்டு இருக்கிறது ...


Dharmavaan
டிச 24, 2024 07:48

முதலில் வங்க தேச ,ரொஹிங்கா கள்ள குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் பிறகு ஹசீனா பற்றி பேசட்டும்


visu
டிச 23, 2024 21:04

ஷேய்க் ஹசீனா தான் இன்னமும் பிரதமர்தான் மிரட்டி கொலை அச்சுறுத்தல் காரணமாக தப்பி இந்தியா வந்தேன் எங்கள் நாட்டை தீவிரவாதிகளிடமிருந்துமீட்க்க இந்தியா உதவ வேண்டும் என்று கேட்டால் என்ன செய்ய முடியும் அல்லது தேர்தல் நடத்தி வெற்றி பெரும் அரசு இந்த கோரிக்கையை வைக்க சொல்லலாம்


veera
டிச 23, 2024 20:12

வேணும்னா ராகுல் பாப்புவை தாரோம் .....வச்சுக்கோங்க


தத்வமசி
டிச 23, 2024 19:45

ஜனவரி இருபது தேதி வரை ஆடுங்கப்பா... அதுக்கு அப்புறம் இவர் தான் அந்த பலியாடப்பா... ஒண்ணுத்துக்கும் பயனில்லாத ஒரு ஆட்சி. இதை எதிர்த்து போராட எவனுக்கும் அறிவில்ல. "நல்லா இருந்த நாடும், அதை நாசமாக்கிய நாலு பெரும்" என்று ஒரு படமே எடுக்கலாம்.


sankaranarayanan
டிச 23, 2024 18:54

ஹசீனாவை, தங்கள் நாட்டிடம் ஒப்படைத்தவுடன் அவரை கைது செய்து சிறையில் வைத்துருப்பார்கள் நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமாம் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவரின் மகளுக்கே இந்த கதி என்றால் அவர்கள் மனிதர்களே இல்லை ஒருபோதும் இந்தியா ஹஸீனாவை அவர்களிடம் ஒப்படைக்கவே செய்யாது ஒருகால் ஐநாவிடம் ஒப்படைத்தால் ஒப்படைக்கலாம் நாட்டில் இன்னும் அமைதியே இல்லாமல் இருக்கும்போது தீவிரவாதிகளின் ஆட்சிக்கு அடிபணிந்து யூனஸ் ஆட்சிசெய்கிறார் அது அவரையே விரைவில் ஒருநாள் பழி தீர்க்கும்


SANKAR
டிச 23, 2024 22:24

many European countries will give her asylum...after Mujibs assassination she stayed in UK for long time ..this time Modi certainly willnot give her up


GMM
டிச 23, 2024 18:05

முன்னாள் வங்கதேச அரசு. தற்போது சர்வதேச அங்கீகாரம் பெறாத தற்காலிக தீவிரவாத குழுவிற்கு எந்த கடிதமும் எழுத தகுதி இல்லை. நாளை வேறு ஒரு குழு கைப்பற்ற முடியும். தேர்தல், ஜனநாயகம், சர்வாதிகாரம், ராணுவ ஆட்சி போன்ற எந்த பிரிவிலும் இல்லை. இந்தியாவிற்கு இன்னும் ஹசீனா தான் ஆதாரிட்டி . ஒப்பந்தப்படி, முதலில் கள்ளத்தனமாக இந்தியாவில் குடியிருக்கும் உங்கள் நாட்டு குடிமக்களை அழைக்கவும். அல்லது இந்தியாவுடன் இணையவும்.


M Ramachandran
டிச 23, 2024 17:17

இடை கால் அரஸுக்கு இது போனற உரிமை கோர முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை