உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கை பிரதமராக பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய

இலங்கை பிரதமராக பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். அவருக்கு அதிபர் அனுரா திசநாயகே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அனுரா திசநாயகே வெற்றி பெற்றார். நேற்று அவர் அதிபராக பதவியேற்றார். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்த தினேஷ் குணவர்தன ராஜினாமா செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7q1s97ud&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அந்நாட்டின் பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டார். இன்று அவர் பதவியேற்று கொண்டார். அவருக்கு அனுரா திசநாயகே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையின் 16வது பிரதமரான அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில்துறை, சுகாதாரம், முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் தேசிய மக்கள் சக்தி(என்பிபி) கட்சியை சேர்ந்த இவர் பிரபல கல்வியாளர், உரிமைகள் ஆர்வலர் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balaji
செப் 24, 2024 18:19

உரிமைகள் ஆர்வலராமே? தமிழரின் உரிமைகளை கொடுப்பாரா? இந்த இடதுசாரிகள் எல்லோருமே ஒரு புது டிசைன் தான்...


Rasheel
செப் 24, 2024 18:12

இலங்கையை சார்ந்த பௌத்தர்கள் மஹாவிஷ்ணுவை வழிபடுகிறார்கள். ராஜபக்ஷே திருப்பதி கோவிலுக்கு வருவது வாடிக்கை.


ஆரூர் ரங்
செப் 24, 2024 17:01

அழகும் கருணையும் நிறைந்த மஹாலக்ஷ்மி என்பதே ஹரிணி என்பதன் சமஸ்கிருத பொருள். இரண்டும் இருக்கிறதா?


J.Isaac
செப் 24, 2024 17:23

இங்கேயும் ஆரம்பிச்சாச்சா ?அமர சூரியா விற்கு என்ன அர்த்தம் ?


நிக்கோல்தாம்சன்
செப் 24, 2024 15:41

விளங்கிடும் ,


புதிய வீடியோ