உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு கடையில் காவலாளியாக இந்தியாவின் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் பராகலனைச் சேர்ந்த கபில் (26) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடையில் அவர் பணியில் இருந்த போது, கடைக்கு வெளியே ஒருவர் இயற்கை உபாதை காரணமாக சிறுநீர் கழித்துள்ளார்.இதைக் கண்ட கபில், அந்த நபரை தடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சிறுநீர் கழித்த நபர், தாம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கபிலை சரமாரியாக சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்த கபில் உயிரிழந்தார்.சுட்டுக்கொல்லப்பட்ட கபில் 3 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றவர் என தெரிகிறது. தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அன்றிலிருந்து அமெரிக்காவில் வசித்து வரும் கபிலுக்கு சொந்த ஊரில் பெற்றோரும், 2 சகோதரிகளும் உள்ளனர்.கபில் சுட்டுக்கொல்லப்பட்ட விவரம் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு வர மத்திய அரசும், ஹரியானா மாநில அரசும் உதவவேண்டும் என்று குடும்பத்தினரும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ் மைந்தன்
செப் 09, 2025 09:13

தமிழகத்திலும் பெண்களுக்கு துப்பாக்கி வழங்கலாம் இந்த ஊழல் கஞ்சா ரவுடி மாடல் அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு


Sudha
செப் 09, 2025 08:45

அமெரிக்காவில் காவலாளி துபையில் துப்புரவு தொழில், என்று தணியும் இந்த மோகம்?


ஈசன்
செப் 09, 2025 08:38

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இந்த நபர் கள்ளத்தனமாக அமெரிக்கா சென்றது தவறு. அப்படிப்பட்ட நபர் அந்த நாட்டு குடிமகனை தட்டி கேட்க எந்த அருகதையும் கிடையாது, அவன் கொலையே செய்தால் கூட.


Moorthy
செப் 09, 2025 08:29

ஆழ்ந்த அனுதாபங்கள் உயிரிழந்த நம் சகோதரரின் குடும்பத்துக்கு இந்த காவலாளி வேலைக்காகவா லட்சக்கணக்கில் செலவு செய்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறினார் ?? பாவம்


Ramesh Sargam
செப் 09, 2025 08:29

அமெரிக்காவில் பொது இடங்களில் நடந்து செல்வதற்கே மிக பயமாக உள்ளது. யாரிடம் துப்பாக்கி இருக்கும் என்று தெரிவதில்லை. மிகவும் பயந்து பயந்து வாழ்க்கை வாழவேண்டி இருக்கிறது. இதுபோன்ற பயத்தினால்தான் மக்களை அங்கே வீதிகளில் பார்க்கவே முடியாது. ஒருவித நரக வாழ்க்கைதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை