உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனமழையில் வெள்ளக்காடானது ஸ்பெயின்!

கனமழையில் வெள்ளக்காடானது ஸ்பெயின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாட்ரிட்: கனமழை காரணமாக ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது.மேலும் வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் மோசமான நிலை நிலவுகிறது. அந்நாட்டின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வீதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நின்ற கார்கள் என்று திரும்பும் பக்கமெல்லாம் சேதம். இதற்கு மத்தியில் தான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.வெள்ள நீர் வீதிகளில் பெருக்கெடுத்து பாய்ந்த காரணத்தால் குடியிருப்புகள் நீரால் சூழ்ந்த பகுதி போல காட்சி அளிக்கின்றன. வீதிகள் மிதக்கும் கல்லறையாக மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாகவும் ஸ்பெயின் ராணுவம் மீட்டது. சுமார், 70 பேரை இப்படி மீட்டதாக தகவல் கிடைத்துள்ளது.மீட்கப்பட்டவர்கள் மொட்டை மாடி மற்றும் கார்களில் சிக்கி இருந்தவர்கள். தரைவழியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை அணுக முடியாத சூழலை ராணுவம் எதிர்கொண்டது. தற்போது அங்கு வீடு வீடாக ராணுவத்தினர் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.சுமார் 1.5 லட்சம் மக்கள் அங்கு மின்சார வசதி இல்லாமல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உயிர் வாழ்வதற்கான அடிப்படை உணவு ஆதாரம் கூட இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
நவ 01, 2024 22:00

செய்தியை சரியாக படிக்காமல் நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துவிட போகிறார்...


கோபாலன்
நவ 01, 2024 17:53

நீங்கள் காண்பிக்கும் படத்துக்கு 'கார் காடு' என பெயர் சூட்டலாம்.


கத்தரிக்காய் வியாபாரி
நவ 01, 2024 14:30

நம்ம முதல்வர் ஸ்பெயினுக்கு சென்றபோது, அங்க மழை நேரத்தில் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யவேண்டும்னு சொல்லிட்டு வந்துருப்பார் போல.


பாமரன்
நவ 01, 2024 13:25

இயற்கை சீற்றங்கள் தவிர்க்க முடியாதது... எவ்ளோ முன்னேறி இருந்த நாடாக இருந்தாலும் கூட...


Palanisamy Sekar
நவ 01, 2024 13:19

அங்கேயும் கூட நான்காயிரம் கோடியை சுவாஹா விட்ட அரசியல்வாதிகள் இருப்பார்களோ என்னவோ. பேய் மழை என்பதெல்லாம் ஏதுமில்லை. மழை நீர் வடிய இடமில்லாமல் செய்த காரியம்தான் இதற்கு பொறுப்பு. அங்கே உள்ள அரசியல் நிலைமையை கண்டால் நமது மாநில கொடுமைதான் அங்கேயும் இருக்கக்கூடும். விவரமில்லாத பணம் சேர்க்கும் அரசியல்வியாதிகள் நீக்கமற நிறைந்துள்ளார்கள் உலகெங்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை