உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சவுதி அரேபியாவில் கனமழை வெள்ளம்

சவுதி அரேபியாவில் கனமழை வெள்ளம்

ஜெட்டா: வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் பெய்து வரும் கனமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.சவுதி அரேபியாவில் அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து சவுதி அரேபியாவில் பரவலாக கனமழை வெளுத்து வாங்க துவங்கியது.சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முக்கிய நகரங்களான ஜெட்டா, மதீனா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்ட்டுள்ளது.கடந்த மாதம் ஐக்கிய அரசு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் கனமழை காரணமாக துபாய், உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழக்கைபாதிக்கப்பட்டது. தற்போது சவுதி அரேபியாவை கனமழை புரட்டி போட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

J.V. Iyer
மே 02, 2024 04:10

அய்யனே பெருமாளே அப்படியே இந்த பக்கமும் கொஞ்சம் மழையை எங்கள் கண்ணிலும் காட்டுங்கள் கடவுளே தீயமுன்னேற்றத்திற்காக வோட்டு போட்ட மக்களை தனியாக தண்டியுங்கள் வோட்டு போடாமல் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்தவர்களுக்கு வேறு தண்டனை கொடுங்கள் எதற்கு எல்லோரையும் தமிழ்நாட்டில் தண்டிக்கிறீர்கள், கடவுளே தண்ணி காட்டுங்கள் அந்த தண்ணி இல்ல மழை, அய்யா


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி