உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனா: எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து விபத்து: 100 கார்கள் சேதம்

சீனா: எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து விபத்து: 100 கார்கள் சேதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீய்ஜிங்: சீனாவில் எக்ஸ்பிரஸ் சாலையில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.சீனாவின் மிகப்பெரிய நகரங்களான பீய்ஜிங் , சுஸ்ஹோவ் ஆகிய நகரங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலைகள் பெருமளவு உள்ளன. சீனாவில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சம்பவத்தன்று சுஸ்ஹோவ் மாகாணத்தில் எக்ஸ்பிரஸ் சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலை தடம் தெரியாமல் வேகமாக வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் மோதின. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காருக்குள் பலர் சிக்கி வெளிவர முடியாமல் தவித்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து எக்ஸ்பிரஸ் சாலைகள் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை மீறி வாகனங்கள் சென்றதால் இந்த விபத்து நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
பிப் 24, 2024 00:02

தமிழகத்தில் இதுபோன்ற பனிப்பொழிவு ஏட்பாடாது. இருந்தாலும், தமிழக அரசு அப்படி ஏதாவது ஏட்பட்டால் அதிலிருந்து மக்களை காப்பாற்ற ஒரு ஆயிரம் கோடி ரூ. அடுத்த பட்ஜெட்டில் ஒதுக்கும். மக்களே கவலைப்படாதீர்கள்.


Bye Pass
பிப் 23, 2024 22:51

கமலக்கண்ணா வீட்லேயே சீலிங் fan விழுந்து செத்தவங்களும் கணக்கில் இருக்காங்க


சோலை பார்த்தி
பிப் 23, 2024 22:14

சைனா தயாரிப்பு. ...அப்படிதான் இருக்கும்


rsudarsan lic
பிப் 23, 2024 21:27

ஒருத்தன் கூட சாகலையா .? இதுல கூட மர்மமா?


sankaranarayanan
பிப் 23, 2024 20:55

நம்பதான் எட்டு வழிச்சாலையே வேண்டாமென்று சொல்லி விட்டோமே இங்கே எப்படி இதுமாதிரியான விபத்துகள் நடக்கும் எங்களுக்கு கப்பிபோட்ட சாலை இல்லையேல் சிறிது தார் போட்ட சாலையே போதும் அந்த கான்ட்ராக்ட்டிலேயே நாங்கள் திகிடுத்ததாம் செய்து வாழுவோம்


கமலக்கண்ணன்
பிப் 23, 2024 20:06

நம்ம ஊரு எட்டுவழிச்சாலைகளிலும் இப்பிடி நடைபெறும். அவ்வளவு ட்ராஃபிக்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை