உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனானில் ஹிஸ்புல்லா தளபதி ஷேக் முகமது அலி ஹம்மாடி சுட்டுக்கொலை

லெபனானில் ஹிஸ்புல்லா தளபதி ஷேக் முகமது அலி ஹம்மாடி சுட்டுக்கொலை

பெய்ரூட்: லெபனானில் வீட்டின் முன் ஹிஸ்புல்லா தளபதி ஷேக் முகமது அலி ஹம்மாடி சுட்டுக் கொல்லப்பட்டார்.மூத்த ஹிஸ்புல்லா தளபதி ஷேக் முகமது அலி ஹம்மாடி, கிழக்கு லெபனானில் உள்ள அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது, நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலர் அவர் மீது திடீரென தாக்கினர். அவர் மீது ஆறு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஷேக் ஹம்மாடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9c6nr0no&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=01985 ஆம் ஆண்டு 153 பயணிகளை ஏற்றிச் சென்ற மேற்கு ஜெர்மன் விமானத்தை ஹம்மாடி கடத்திய பின்னர் எப்.பி.ஐ., கண்காணிப்பின் கீழ் வந்தார். விமானத்தில் ஒரு அமெரிக்க நாட்டவரை சித்ரவதை செய்து கொலை செய்ததில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே நடந்து வரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழ்வேள்
ஜன 22, 2025 20:50

அம்மாடி... மூர்க்க ஹம்மாடி ஒழிந்தான்...இனி இங்குள்ள டூப்ளிகேட் மூர்க்கம் அவனுக்கு இரங்கல் கூட்டம் எல்லாம் நடத்தி குண்டு வெடிப்பு நடத்தி துக்கம் அனுசரிக்கும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை