உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கக்கடலில் சீனக்கப்பலுக்கு என்ன வேலை? பிரெஞ்சு நிறுவனம் ஆய்வில் அம்பலம்!

வங்கக்கடலில் சீனக்கப்பலுக்கு என்ன வேலை? பிரெஞ்சு நிறுவனம் ஆய்வில் அம்பலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்காள விரிகுடா கடலில் சீன உளவு கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, பிரெஞ்சு நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.பிரெஞ்சு கடல்சார் புலனாய்வு நிறுவனம், கடல்களில் கப்பல்களை கண்காணிக்கும் பணி செய்து வருகிறது. இந்த நிறுவனம் செயற்கைகோள்களை பயன்படுத்தி, கப்பல்களின் இயக்கத்தை கண்காணித்து வருகிறது. அந்த வகையில், வங்காள விரிகுடா கடலில் இந்த நிறுவனம் ஆராய்ச்சி செய்துள்ளது. அப்போது தான், சீனாவில் சதி செயல் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.சீன உளவு கப்பல் இந்தியா மற்றும் இலங்கைக்கு அருகே பல நாட்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த உளவு கப்பல் ரோந்தில் ஈடுபட்டு வருவதை யாருக்கும் தெரியாத வகையில், இருப்பிடத்தை காட்டும் கருவியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக பிரெஞ்சு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தான், வங்காள விரிகுடா கடலில் சீன கப்பலுக்கு என்ன வேலை என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இது குறித்து பிரெஞ்சு நிறுவனம் கூறியதாவது: இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை இந்திய கடல் பகுதியைச் சுற்றியுள்ள போக்குவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. எங்கள் அமைப்புகள் பல நாட்களுக்கு அதன் இயக்கத்தை கண்காணிக்க முடிந்தது.எங்களது நோக்கம் கடல் போக்குவரத்து வழித்தடங்களை அடையாளம் காண்பது. கடந்த சில ஆண்டுகளாக சீன ஆராய்ச்சி கப்பல்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. சீனக் கப்பல் காஸ்டர்ன் இந்திய கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுகிறது. இவ்வாறு பிரெஞ்சு நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மூத்த அதிகாரிகள் கூறியதாவது: வங்கக்கடலில் சீன கப்பல் ஆய்வு நடத்தும் பின்னணி சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த செயல்பாடு, சீன-வங்கதேச உறவுகள் வளர்ந்து வருவதை குறிக்கிறது. இந்த சீன ஆராய்ச்சி கப்பல் உளவு தகவல்களை சேகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட வாய்ப்புள்ளது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

subramanian
ஜூலை 11, 2025 21:51

சீனாவின் கப்பலை பறிமுதல் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் தூள் தூளாக்க வேண்டும் .


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 11, 2025 21:25

பிரெஞ்சு நிறுவனம் சொல்லி நமக்கு தெரிய வேண்டியிருக்கு. பிரெஞ்சு நிறுவனத்துக்கு வங்கக்கடலில் என்ன ஆராய்ச்சி.


Ramesh Sargam
ஜூலை 11, 2025 20:50

பாகிஸ்தானைவிட இந்த சீனா மிகவும் ஆபத்தான நாடு. சீனாவின் நடமாட்டங்களை இந்தியா எப்பொழுதும் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.


sankaranarayanan
ஜூலை 11, 2025 18:49

சுட்டுத்தள்ளுங்கடா யாரையும் கேட்க வேண்டாம் நமது எல்லைக்குள் அத்துமீறி புகுத்த எவனாக இருந்தாலும் சும்மா விடாதீர்கள்


Barakat Ali
ஜூலை 11, 2025 18:43

ரபேல் பற்றிக்குறை கூறியதால் சீனாவின் மீது பிரான்சுக்கு எரிச்சல் ..... இல்லன்னா பிரான்சு இந்த அளவுக்குக்கூட நமக்கு உதவியிருக்காது ....


Nada Rajan
ஜூலை 11, 2025 15:50

சீனா சதிகாரன்.. அவன நம்பாதீங்க அவன ஆரம்பத்திலேயே அடிச்சு விரட்டுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை