உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகள் தொடர்ந்து எரிப்பு! தடுப்பார் யாருமில்லை

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகள் தொடர்ந்து எரிப்பு! தடுப்பார் யாருமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா : வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த வீடு உட்பட ஐந்து வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத வெறியர்களை தடுப்பதற்கு யாரும் இல்லாத நிலையில், அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு வெடித்த மாணவர்கள் போராட்டங்களை தொடர்ந்து, அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார்.

இடைக்கால அரசு

இதை தொடர்ந்து, ராணுவம் நிர்வாகத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது. மாணவர்கள் அமைப்பினருடன் பேச்சு நடத்திய பின், நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. ஷேக் ஹசீனா பதவி விலகிய பின், வங்கதேசத்தில் அரசியல் குழப்பம் அதிகரித்து, மதவாதம் தலைவிரித் தாடுகிறது. குறிப்பாக, நம் நாட்டுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுவதுடன், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித் து உள்ளன. வரும் பிப்ரவரி மாதம் அங்கு பொதுத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், கடந்த 18ம் தேதி வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, வங்கதேசத்தின் பல நகரங்களில் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக, ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. இதன் ஒரு பகுதியாக, மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த திபு சந்திர தாஸ், 27, என்ற ஹிந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். மேலும், அவருடைய உடலை மரத்தில் கட்டி வைத்து தீ வைத்தனர்.

5 பேர் கைது

இதேபோன்று பல இடங்களில் ஹிந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள், கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சாட்டோகிராம் மாவட்டத்தில் உள்ள ராவ்ஜனின் மூன்று இடங்களில், கடந்த ஐந்து நாட்களுக்குள் ஏழு ஹிந்து குடும்பங்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பிரோஜ்பூர் மாவட்டம் தும்ரிடோலா கிராமத்தில், சஹா என்ற ஹிந்துவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்டது. அருகே இருந்த மேலும் நான்கு வீடுகளிலும் தீப்பற்றியது. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், வீடுகளில் துாங்கிக் கொண்டு இருந்தவர்கள் கண் விழித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வெளியில் தப்பிக்க கதவை திறக்க முயன்றபோது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, தகர மேற்கூரைகளையும், மூங்கில் வேலிகளையும் வெட்டி உயிர் தப்பியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதில், வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இச்சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின்படி ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைக்கால அரசு, ராணுவம் உட்பட எந்த தரப்பும் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், தட்டிக் கேட்க யாரும் இல்லாததால், சில கும்பல்கள், வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

71 தாக்குதல்கள்!

மொத்தம், 17.5 கோடி பேர் வசிக்கும் வங்கதேசத்தில், ஹிந்துக்களின் எண்ணிக்கை 8 சதவீதமே. அங்குள்ள சிறுபான்மை மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பாண்டு ஜூன் முதல், இதுவரையிலான கால கட்டத்தில் ஹிந்துக்கள் மீது 71 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன; 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன. இத்தாக்குதல் சம்பவங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இல்லாமல், குறிப்பிட்ட மதத்தை குறிவைத்தே நடந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SUBBU,MADURAI
டிச 30, 2025 06:14

During partition, Bangladesh had 28% of minorities. Now they are 6% and are getting burned..


SUBBU,MADURAI
டிச 30, 2025 05:39

பங்களாதேஷில் உள்ள கலிதாஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சியான BNP மற்றும் இந்த ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சி AL என்கிற இரண்டு தேசிய கட்சிகள்தான் இதுவரை அந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வந்திருகின்றன. சுருக்கமாகச் சொன்னால் நம்ம ஊர் இரண்டு மட்டைகளான திமுக, மற்றும் அதிமுக போல. கலிதாஜியா திமுக என்றால், இந்த ஷேக் ஹஸீனா அதிமுக. எனவே இந்த ஷேக் ஹஸீனா ஒன்றும் புனிதர் அல்ல இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் லட்சக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்களை இந்தியாவின் எல்லை மாநிலங்களின் வழியாக சுலபமாக ஊடுருவ ஏற்பாடு செய்தார். அதன் பலன்தான் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் வரை இந்த வங்கதேச ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஊடுருவி ஹோட்டல்கள், மால்கள் போன்ற பல வணிக நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வங்காள (பெங்காலி) மொழி பேசுவதால் தங்களை மேற்குவங்கத்தை (நம்ம தீதி மம்தா மாநிலம்) சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே அசாம், டார்ஜிலிங், மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த நம் இந்தியத் தொழிலாளர்களும் தமிழகத்தில் பணி புரிகிறார்கள் எனவே இவர்களை அடையாளம் காண்பது அரிதான விஷயமாகும். அப்படியிருந்தும் இந்த ரோஹிங்கியாக்களை NIA அமைப்பினர் கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும் இவர்களையிட்டு என்றைக்கும் நம் நாட்டிற்கும் ஆபத்துதான். இந்த ஷேக் ஹஸீனா இந்தியாவிடம் தஞ்சம் கேட்டதால் நாம் தார்மீக அடிப்படையில் அவருக்கு நம் நாட்டில் தங்குவதற்கு அடைக்கலம் அளித்திருக்கிறோம். எனவே அமெரிக்காவின் கைப்பாவையான வங்கதேச இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்கும் முகம்மது யூனுஸ் கேட்பதால் மட்டும் ஷேக் ஹஸீனாவை அந்த நாட்டிடம் இந்தியா ஒப்படைக்காது. இப்போதுள்ள சூழ்நிலையில் அவரை அந்த நாட்டிடம் ஒப்படைத்தால் அடுத்த நாளே அவரை கொன்று விடுவார்கள் என்பதால் இந்தியா ஷேக் ஹஸீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க போவதில்லை. இருந்தாலும் அங்குள்ள இந்துக்களையும் அவர்களின் சொத்துக்களையும் வங்கதேச மதவாதிகளிடம் இருந்து காப்பாற்ற மத்திய மோடியின் பாஜக அரசு அவசரகால நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.


கோபாலன்
டிச 30, 2025 05:06

வெற்றி மாறன் தீமைகளை கண்டு கொதித்து எழுவாய். லில்லிபுட் நடிகர், திராவிட சத்தியராஜ், பார்பன எதிர்ப்பு சூத்திர ஆதரவு திக கோஷ்டிகள் பொங்கி எழுவார்கள். நமது மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்கள் அங்கு சிறுபான்மை இந்துக்கள் நலன் காக்க அறிக்கைகள் விடுவார்கள். பா.ரஞ்சித், மாரி.செல்வராஜ் ஆகியோர் பங்களாதேஷ் இஸ்லாமிய செயல்களை தோலிரித்து காட்டப் போகிறார்கள். திருமா அனேகமாக அங்கு உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்கு அங்கு செல்ல பிராணிகளுக்கான வாய்ப்பு உள்ளது.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 30, 2025 03:02

புல்டோசர் கிடைக்கவில்லை போலும்


SUBBU,MADURAI
டிச 30, 2025 05:23

உன்னைப் போன்ற போலிப் பெயரில் உள்ளவர்களுக்கு இது உவகையளிக்கும் செய்திதான் என்பது நீ போடும் கருத்துக்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.


பெரிய ராசு
டிச 30, 2025 06:34

இவன் இங்கு சிரித்து கொண்டு எக்காளம் கொண்டும் இருக்குக்கும் காலம் மாறும் ஹிந்துஸ்தான் உன்னை விரட்டியடிக்கும் காலம் வெகுதூரம் இல்லை மூர்க்கனே ..அன்று நீ அழுவதை நங்கள் பார்த்து இருப்போம் ...


vivek
டிச 30, 2025 06:56

கேடுகெட்ட பிறப்பு


N Sasikumar Yadhav
டிச 30, 2025 01:19

பயங்கரவாத இசுலாமிய கும்பலுங்க அதிகமாக இருந்தால் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என இந்த சம்பவம் உணர்த்துகிறது


G S RAJAN ITHALAR OOTY
டிச 30, 2025 00:06

பொங்கிய போராளிகள் எங்கே??????


ஜெய்ஹிந்த்புரம்
டிச 30, 2025 06:03

புல்டோசர் தேடி போயிருக்காங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை