உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் வீட்டில் பற்றிய தீ: காயமடைந்த இந்திய மாணவி உயிரிழப்பு

அமெரிக்காவில் வீட்டில் பற்றிய தீ: காயமடைந்த இந்திய மாணவி உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவில் வீட்டில் ஏற்பட்ட தீயால் பலத்த காயமடைந்த 24 வயது இந்திய மாணவி உயிரிழந்தார்.தெலுங்கானாவைச் சேர்ந்த 24 வயது சஹஜா ரெட்டி உடுமலா, அமெரிக்காவின் நியூயார்க், அல்பானி நகரில் வசித்து வந்தார். சஹஜா மூன்று ஆண்டுகளுக்கு முன் சைபர் செக்யூரிட்டியில் ( இணைய பாதுகாப்பு) முதுகலைப் பட்டம் பெற அமெரிக்கா சென்றார், சில மாதங்களுக்கு முன்புதான் வேலைக்குச் சேர்ந்தார். அவரது தந்தை ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் அவரது தாய் ஒரு ஆசிரியர். டிசம்பர் 4ம் தேதி வீட்டில் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ பற்றியது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: வீட்டில் தீ பரவியது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பலத்த காயமடைந்த சஹஜாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்த பெண் உயிரிழந்தார் என்றனர். இது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய துாதரகம் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: அல்பானியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த உடுமாலாவின் அகால மறைவால் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கின்றோம். மேலும் உடுமலாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்.இவ்வாறு இந்திய துாதரகம் பதிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ