உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வியட்நாமை உலுக்கிய வங்கி மோசடி: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை

வியட்நாமை உலுக்கிய வங்கி மோசடி: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹனோய்: வியட்நாம் வங்கியில் 12 பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.வியட்நாமின் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர் ட்ரோங் மை லான்(68). அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய இவர், மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தார். பிறகு தாயாருடன் சேர்ந்து அழகுசாதன பொருட்களை விற்கத் துவங்கினார். பொருளாதார சீர்திருத்தம் காரணமாக 1986 ல் அவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்தார். 1990ல் ஹோட்டல் மற்றும் உணவகம் துவக்கினார். பிறகு 'Van Thinh Phat Group' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி அதில் கொடி கட்டிப் பறந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3a5zmpzw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02022ம் ஆண்டு அக்., மாதம் ட்ரோங் மை லான் கைதான பிறகு அவரது மோசடிகள் வெளிச்சத்திற்கு வரத் துவங்கின. அந்நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியான சைகோன் வணிக வங்கியை அவர் ரகசியமாக கட்டுப்படுத்தியது தெரிந்தது. மேலும் 2012 முதல் 2022 வரை பல போலி நிறுவனங்களை துவக்கியும், தனக்கு வேண்டியவர்கள் மூலமும் போலியாக கடன் பெற்று பெரும் மோசடி செய்தார். இதன் மூலம் அவர் 12.5 பில்லியன் டாலர் கடன் பெற்றார்.வங்கி மோசடியை மறைக்க ட்ரோங் மை லான் வங்கி அதிகாரிகளுக்கு 5.2 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்து உள்ளனர். வியட்நாம் வரலாற்றில், இந்தளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.இந்த முறைகேட்டில் ட்ரோங் மை லான், கணவர்( ஹாங்காங்கில் தொழிலதிபர்) மற்றும் உறவினர் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்கள் மீதான ஆதாரங்களை 105 பெட்டிகளில் வைத்து போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனை கண்காணிப்பதற்கு என சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.ஏப்ரல் மாதம் முதல் துவங்கிய விசாரணை முடிவில், மோசடி, லஞ்சம் மற்றும் வங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக ட்ரோங் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.வியட்நாம் சட்டப்படி மோசடித் தொகையில் 75 சதவீத தொகையை திருப்பி அளித்தால் மரண தண்டனை குறைக்கப்படும். இதனையடுத்து அரசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய 9 பில்லியன் டாலரை திரட்டும் பணியில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவரது சொத்துகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கும் முயற்சி நடக்கிறது. அவரது நிறுவனத்தின் பங்குகளை விற்க முயற்சி நடந்த போதும், அது சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

UTHAYA KUMAR
டிச 05, 2024 10:27

2G ய விட இது கம்மி ..


Balaji Sivasankaran
டிச 05, 2024 06:38

அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இன்னும் வேலை செய்கிறது பரவாயில்லை. இந்தியாவில் இதுபோல் நடக்கவில்லையா பணக்காரன் அத்தனை பேரும் வங்கிகளை சுரண்டியவர்கள்தான் அவர்களுக்கு சிவப்பு கம்பளம விரித்து மரியாதை செலுத்துறாங்க.


Anantharaman Srinivasan
டிச 04, 2024 20:00

வங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக ட்ரோங் மை லானுக்கு மரண தண்டனை.. நம்ம ஊரிலேயும் வடக்கே இரண்டு தொழிலதிபர்கள் வங்கியில் பெருமளவு கடன் பெற்று கோலோச்சுகிறார்கள். வியட்நாம் கோர்ட் போல நடக்குமா..??


Sivak
டிச 04, 2024 23:38

தெற்கே இருக்கிற தொழிலதிபர்கள் கண்ணுக்கே தெரியாதா பாஸ் ?? தப்பு செய்திருந்தா அவர்களை தொங்க விடலாமே ...


Jagan (Proud Sangi)
டிச 04, 2024 19:52

கம்யூனிஸ்ட் கட்சி பதவியில் உள்ளவர்கள் சைகோன் வங்கியில் முறைகேடு செய்து, அரசியல் குடும்ப பின்புலம் இல்லாத இவரை செட்டப் செய்து உள்ளார்கள் என்று பேச்சு அதிகம் அடிபடுகிறது. தண்டனை நிறைவேற்றி ஊத்தி மூடி விடுவார்கள்


Sidharth
டிச 04, 2024 19:20

ஜெய் ஷாவ விட பெரிய ஆளா இருக்கும் போல இந்த அம்மா


Sathyan
டிச 04, 2024 18:52

Hats off to their justice tem. Within 9 months, entire proceedings completed and judgement delivered. No question of any appeal. No scope for delaying. We should hang our heads in shame. Despite many accusations against many politicians, all are happily roaming around.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 19:53

Judicial s y s t e m .....


RAMAKRISHNAN NATESAN
டிச 04, 2024 18:31

தாயார்தான் வளர்த்து வந்திருப்பதாகத் தெரிகிறது ...... சி ஐ டிகாலனி கதை போல உள்ளது ....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 19:11

என்ன கதை ? அந்த தொலைகாட்சி விவகாரத்தில் முறைகேடான தொகையை செக் மூலமாக வாங்கிய கதையா ? அதெல்லாம் புல்லு முளைச்சு போச்சு .....


Narayanan Muthu
டிச 04, 2024 18:27

நம்ம ஊர்லயும் எல்லாம் நேர்மையான முறையில் விசாரிக்க துவங்கினால் மோசடி மன்னன் உட்பட அவரது நண்பர்கள் பலரும் தண்டிக்க படுவார்கள்.


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 18:02

கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக இப்படி அனத்திக் கொண்டே காலம் தள்ளுகிறார்கள் பாவம். என்னவோ ஆரியர்கள் எல்லாரும் உத்தமர்கள் போல, என்ன செய்தி வந்தாலும் திராவிடரோடு சம்பந்தப்படுத்தி எழுதுவார்கள். செய்த அத்தனை கொள்ளைகளும் நிரூபணமாகி, பதவி பறிக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயலலிதா ஆரியர். கோடிகளில் கடன் வாங்கிக்கொண்டு நாட்டை விட்டு ஓடிய 30, 40 பேரில் ஒருத்தர் கூட திராவிடர் அல்ல. ஒருத்தர் கூட கிறிஸ்தவரோ முஸ்லிமோ அல்ல. இருந்தாலும்... இப்படித்தான் எழுதப்படுகிறது.


Chandran,Ooty
டிச 04, 2024 19:07

எங்ககிட்டதான் விஞ்ஞானப் பூர்வ ஊழல் விஞ்ஞானி என்று நீதிபதி கொடுத்த கிளீன் சர்ட்டிபிகேட் இருக்கே எங்களை யார் நாக்கு மேல பல்லை போட்டு குற்றம் சாட்ட முடியும்?


Anantharaman Srinivasan
டிச 04, 2024 19:52

மாட்டிக்காத திருடர்கள் திராவிடர்கள். தப்பிக்கவைத்தவர்கள் ஆரிய ஆடிட்டர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 19:59

முன்னணி கட்சிப்பிரமுகர்கள், தலைமைக்குடும்ப உறுப்பினர்கள் - அதாவது ஆலமர விழுதுகள் - சந்திக்கும் வழக்குகளுக்கெல்லாம் பெரும்பாலும் கபில் சிபல் தான் ஆஜராகிறார் ..... அவரும் நீங்கள் குறிப்பிடும் ஆரியர்தான் ..... ஏன் ஆரிய வழக்கறிஞருக்கு கேஸ் கொடுக்கிறீர்கள் ???? திராவிட வக்கீலை ஏன் அமர்த்திக்கொள்வதில்லை ???? கருணாநிதியின் யோகா ஆசிரியர் கூட ஆரியராமே ???? கோவில் கோவிலாக ஏறி இறங்கும் அம்மையார் கூட ஆரிய அர்ச்சகர் சம்ஸ்கிருதத்தில் ஓதுவதைத்தான் / அர்ச்சிப்பதைத்தான் விரும்புகிறாராமே ???? ஏன் அப்படி ????


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 17:57

எந்த நாட்டைப் பற்றி என்ன செய்தி வந்தாலும், திராவிடர், தமிழ் நாடு இவற்றை சம்பந்தப்படுத்தி எழுதுவதில் என்ன கிடைக்கிறதோ? இதனால் யாரும் அவரவர் கொள்கை, விருப்பங்களை மாற்றிக் கொள்ளவா போகிறார்கள்? போரடிக்கிறது.


Mahendran Puru
டிச 05, 2024 09:49

சம்பந்தமில்லாமல் திராவிடத்தை திட்டுதற்கு ஆள் வச்சிருக்காங்க.


புதிய வீடியோ