உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மலைப்பாம்பிடம் சிக்கிய பெண் மரணப் பிடியில் தப்பினார்

மலைப்பாம்பிடம் சிக்கிய பெண் மரணப் பிடியில் தப்பினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாங்காங்: தாய்லாந்து நாட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய பெண் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் தப்பினார். பாங்காங்கின் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ஆரோம் அருண்ரோஜ் (60). இவர் வழக்கம் போல் சமையலறைக்கு சென்ற போது ஒரு மலைப்பாம்பு அவரை காலில் ஏறி தொடையில் கடித்து இடுப்பு வரை விறு, விறு என சுற்றி அந்த பெண்ணை இறுக்கியது. அய்யோ, அம்மா என்ற அலறலுடன் ஜன்னல் அருகில் வந்து காப்பாற்றுங்க என கூக்குரலிட்டார். யாரும் வரவில்லை, இரண்டரை மணி நேரம் கழித்து சிலர் வந்ததும் போலீசார் மற்றும் வன அலுவலர்கள் வந்து பாம்பை லாவகமாக பிடித்து பெண்ணின் இடுப்பில் இருந்து அகற்றினர். உடலில் பல பகுதிகளில் பாம்பு கடி காயம் இருந்தது. தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாம்புடன் சுற்றிய படங்கள் சமூக வலை தளத்தில் பரவியது.

மலைப்பாம்பு எப்படி சாப்பிடும் ?

பொதுவாக மலைப்பாம்பு தனது இரைக்கு தேவைப்படும் உயிரினங்களை முதலில் வாயால் கடித்து அந்த பிடிப்பட்ட உயிரினத்தை தனது நீள உடலால் இறுக்க சுற்றி அழுத்தும். பின்னர் பிடிப்பட்ட விலங்கின் உயிர் மூச்சு நின்றதும் வாயில் தானாக கஷ்டப்பட்டு விழுங்கி விடும். ஒரு முறை உணவு எடுத்தால் சில நாட்களுக்கு மலைப்பாம்பு எதுவும் சாப்பிடாது. வயிறு முட்டினால் போதும் அசையாமல் கிடந்தபடி நல்ல அயர்ந்து தூங்கும் பழக்கம் கொண்டது மலைப்பாம்பு. மனிதர்களுக்கு கெடுதல் செய்யும் நோக்கம் அந்த பாம்பிற்கு கிடையாது. தாய்லாந்தை பொறுத்தவரை மலைப்பாம்புகள் அதிகம் வாழுகிறது. இங்கு பாம்பு கடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2023ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரப்படி தாய்லாந்தில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் 12 ஆயிரம் பேரை கடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பாம்பு கடித்து 26 பேர் கொல்லப்பட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Azar Mufeen
செப் 20, 2024 22:27

இந்த பாம்புகள் பிஜேபி கட்சியை விட சக்தி வாய்ந்ததா


ramesh
செப் 20, 2024 20:35

சத்தியநாராயணா உன்னுடைய கூட்டம் தான் இந்தியாவில் உள்ள அரசு பொது துறை நிறுவனங்களை அதானி மற்றும் அம்பானிக்கு கொடுத்து அழகு பார்க்கிறது . கார்பொரேட் முதலாளிகளின் பலகோடி கடன் ரூபாயை தள்ளுபடி செய்து அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது ,ஏழைமக்களின் மீது கொடூரமாக பலமடங்கு வரிவிதித்து சுரண்டுவது பெட்ரோலியம் பொருட்களை ரஷ்யா வில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதன் பலனை மக்களுக்கு கொடுக்காமல் அதிகப்படியாக விலை ஏற்றி சுரண்டிவருவது ,இது போதுமா இன்னும் சொல்ல வேண்டுமா


நிக்கோல்தாம்சன்
செப் 20, 2024 19:56

இந்த பாம்புகள் தமிழக கார்பொரேட் குடும்பத்தை விட சக்தி வாய்ந்ததா?


SP
செப் 20, 2024 17:37

ஆரோம்அருண்ரோஜ் என்பவர்வசித்து வருபவர் என்று இருக்கவேண்டும்.


Raj Kamal
செப் 20, 2024 14:17

இதுக்கும் திமுகவுக்கும் என்னடா சம்பந்தம்?


Sathyanarayanan Sathyasekaren
செப் 20, 2024 18:55

ராஜ் கமல். ஆம்மம்டா திமுக வை பாம்புடன் ஓப்ப்பிடமுடியாது, ஏனென்றால் திமுக வும் அதன் கொத்தடிமைகளும் பாம்பை விட கொடூரமானவர்கள். எவ்வளவு கொள்ளை அடித்தாலும் போதாது, பத்து தலைமுறைக்கு சேர்த்தபின்பும், இங்கே கொள்ளை அடித்து அயல் நாடுகளில் முதலீடு செய்யும் கொள்ளையர்கள். தமிழக கனிம வளங்களை கொள்ளை அடித்து பக்கத்துக்கு மாநிலங்களுக்கு நாடுகளுக்கு விற்பவர்கள். நீ சொன்னது சரிதான் திமுகவுக்கும் பாம்பிற்கும் சம்பந்தம் கிடையாது. இந்த விளக்கம் போதுமா? இல்லை இன்னும் 1960 இல் இருந்து அடித்த கொள்ளைகளை விளக்கவேண்டுமா?


Raj Kamal
செப் 25, 2024 14:32

திரும்பவும் கேட்கிறேன் நீ சொன்ன விளக்கத்துக்கும் திமுகவுக்கும் என்னடா சம்பந்தம்?


RAMAKRISHNAN NATESAN
செப் 20, 2024 13:45

\\ மனிதர்களுக்கு கெடுதல் செய்யும் நோக்கம் அந்த பாம்பிற்கு கிடையாது. //// அதனால யாரும் மலைப் பாம்பை டீம்காவோட ஒப்பிடாதீங்க ..... இன்னொரு பெரிய வித்தியாசம் ஒரு கொழுத்த இரையை சாப்புட்டா பல நாளைக்கு இரைதேடாதாம் ....... ஆனா டீம்கா அப்படியா ????


Sivakumar
செப் 20, 2024 15:20

கொஞ்சம் advanced stage ல இருப்பீங்க போல. பரவாயில்லை, நல்ல மனநல மருத்துவரை அணுகவும்


Barakat Ali
செப் 20, 2024 16:37

சிவக்குமாருக்கு சுருக்குன்னு ஆயிருச்சு ...... பின்ன ?


Ramesh Sargam
செப் 20, 2024 12:27

பாம்பிடமிருந்து கூட தப்பி விடலாம். ஆனால் பாம்பைவிட கொடிய ஜந்துக்கள் நமது அரசியல்வாதிகள். அவர்களிடம் சிக்கினால், மகனே, நீ காலி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை