உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி!

அமெரிக்காவில் விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் குடும்பத்தினர் 4 பேர் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ஒரே குடும்பத்தினர் 4 பேர் விடுமுறை தினத்தை கழிக்க அமெரிக்கா சென்று உள்ளனர். அட்லாண்டாவில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்த்துவிட்டு 4 பேர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களது கார் விபத்தில் சிக்கியது. நான்கு பேரும் சென்ற கார் லாரி மீது மோதி தீ பற்றியதில் உடல் கருகி உயிரிழந்தனர். தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக ஹைதராபாத்திற்கு கொண்டு வரப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மற்றொரு விபத்து

நியூயார்க்கில் நடந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர்கள் இறந்ததாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த மாணவர்கள் 20 வயது மானவ் படேல் மற்றும் 23 வயது சவுரவ் பிரபாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 'இரண்டு இந்திய மாணவர்களான மானவ் படேல் மற்றும் சவுரவ் பிரபாகர் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தோம்' என இந்திய தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
ஜூலை 08, 2025 14:53

வெறும் இந்தியர்கள் மட்டுமே இறக்கின்றனர் சமீபகாலமாக ஏன் சாமி


அப்பாவி
ஜூலை 08, 2025 11:33

இந்த ஊரில் சாலை விதிகள்னா என்னன்னு தெரியாதவனெல்லாம் அங்கு போய் அந்த ஊர் விதிகளை மதிக்காம ஓட்டுறாங்க. அதான் போட்டுத் தள்ளப் படுறாங்க. இந்த ஊர் கதிசக்தி அங்கே செல்லாது.


Bala
ஜூலை 08, 2025 15:41

உண்மை


Sudha
ஜூலை 08, 2025 10:03

வீட்டுக்கு வீடு வாசப்படி எல்லா நாடுகளிலும் கார் லாரி மோதல், அமெரிக்க மோகம் குறைய என் பிரார்த்தனைகள்- வேலைக்கு போவதாக இருந்தாலும் வேடிக்கை பார்ப்பதாக இருந்தாலும்


Nada Rajan
ஜூலை 08, 2025 09:49

ஆழ்ந்த இரங்கல், ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்