உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நான் வங்கப்புலி; முடிந்தால் மோதிப் பாருங்க: ஆக்ஸ்போர்டு பல்கலையில் சவால் விட்ட மம்தா

நான் வங்கப்புலி; முடிந்தால் மோதிப் பாருங்க: ஆக்ஸ்போர்டு பல்கலையில் சவால் விட்ட மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரை நிகழ்த்திய போது, குறுக்கிட்ட மாணவர்கள், ஆர்.ஜி.,கர் மருத்துவமனை சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையின் கெல்லாக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது, சில மாணவர்கள் அவரது பேச்சை குறுக்கிட்டு கோஷமிட்டதுடன், தேர்தலுக்குப் பிந்தைய கலவரம் மற்றும் ஆர்.ஜி.,கர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fru1ib62&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், சுதாரித்துக் கொண்ட மம்தா, பொறுமையுடன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அவர் கூறியதாவது: ஆர்.ஜி.,கர் சம்பவம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது உங்களுக்கு தெரியுமா? இந்த வழக்கு விசாரணை தற்போது மத்திய அரசின் கைகளில் உள்ளது. எங்களிடம் ஏதுமில்லை. இங்கு அரசியல் செய்யக் கூடாது. அதற்கான இடம் இது கிடையாது. என் மாநிலத்திற்கு வந்து, அங்கு என்னுடன் அரசியல் செய்யுங்கள். பொய் செல்லக் கூடாது. உங்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. இங்கு அரசியல் செய்வதற்கு பதிலாக, மேற்கு வங்கத்திற்கு சென்று, உங்கள் கட்சியை பலப்படுத்தி, எங்களிடம் சண்டையிடச் சொல்லுங்கள். என்னை அவமதித்து உங்கள் கல்வி நிறுவனத்தை அவமதிக்காதீர்கள். ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் நாட்டையும் நீங்கள் அவமதிக்காதீர்கள். மீண்டும் என்னை இங்கு வருவதற்காக என்னை ஊக்குவித்துள்ளீர்கள். உங்கள் சகோதரியான நான், யாரைப் பற்றியும் கவலைப்படமாட்டேன். வங்கப் புலி போல நடைபோடுவேன். முடிந்தால் பிடித்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Bhakt
மார் 29, 2025 22:43

கெஜ்ரிவால் போல ஆவார் DIdi.


sankaranarayanan
மார் 29, 2025 18:06

நீங்க ஒரு வைக்கோல் புலி .உங்களுக்கு இவ்வாறு சொல்லத்தான் வெட்கமாக இல்லை.ஒரு அரசியல் தலைவருக்கு அடக்கம் தான் முக்கியம் .அது உங்களிடம் பூஜ்யம்.


c.mohanraj raj
மார் 28, 2025 21:42

நீங்க மிருகமானா சரி .அங்கே உள்ள ஹிந்துக்கள் மிருகமானால் என்ன ஆவீங்க என்பது தெரியுமா


Iyer
மார் 28, 2025 19:15

குடியேற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது , 1 கோடி பங்களாதேஷிகள் மற்றும் ரோஹிந்தியாக்களுக்கு மம்தா ஆதார் + VOTER ID சட்டத்துக்கு புறம்பாக வழங்கி உள்ளார். இதனால் தான் மம்தா ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயித்து வருகிறார். இந்த சட்டவிரோத வெளிநாட்டினர் அடையாளம் கண்டு விரட்டும் வரை - மேற்கு வங்கத்தில் அரசை ... வைக்கவேண்டும்


Venkateswaran Rajaram
மார் 28, 2025 18:21

உங்களை மனுஷின்–ல நினைச்சோம்.கடைசியில மிருகமாயிருக்கே


vbs manian
மார் 28, 2025 18:08

டிவியில் பார்த்தது. ஆக்ஸ்போர்ட பல்கலையில் பேசிய இவரை கிழி கிழி என்று கிழித்தார்கள். மருத்துவ மாணவி சோகம் மேற்கு வங்க மாநில கட்டுக்கடங்கா வன்முறை ஹிந்து வெறுப்பு என்று இவரை திணறடித்தார்கள்.


Nagarajan D
மார் 28, 2025 17:55

அடிவாங்கிய புலி என்று சொன்னால் சரியாக இருக்கும் லண்டனில் உன்னிடம் எத்தனை எதிர் கேள்விகளை மக்கள் கேட்டார்கள் எதற்காவது பதில் சொன்னாயா? ஒரே உளறல் தான்


என்றும் இந்தியன்
மார் 28, 2025 17:42

மேற்கு வங்காள மாநிலத்தின் புலி என்று தன்னை சொல்லிக்கொள்ளவில்லை என்பதை கவனியுங்கள்.


என்றும் இந்தியன்
மார் 28, 2025 17:16

அவள் செய்த / பிதற்றிய ஆங்கில உரையில் அவள் ஒரு இடத்தில் "Fulled" என்று சொல்கிறாள் அது நிறைந்து விட்டது "Full" என்று சொல்வதற்கு அந்த அளவுக்கு ஆங்கிலப்புலமை உள்ளது இந்த முஸ்லீம் மம்தா இவளால் இன்று ஒரு வளர்ச்சியில்லை அதற்குப்பதிலாக இவள் கஸ்மால ஆட்சியில் "West Bengal" என்பது இப்போது "Worst Bengal" "Waste Bengal" ஆகிவிட்டது


Nava
மார் 28, 2025 16:54

அமைதி மார்க்கம் ஓட்டை கவர்வதற்காக சுண்டெலியாக மாறியவர்