மேலும் செய்திகள்
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி 2வது முறையாக கைது
22-Sep-2025
ஒட்டாவா:கனடாவில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி, ஒரு வாரத்திற்குள் ஜாமினில் வெளியே வந்து இந்தியாவுக்கு கொக்கரித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து 'சீக்கியருக்கான நீதி' என்ற காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக குர்பத்வந்த் சி ங் பன்னுான் உள்ளார். இவருக்கு மிகவும் நெருக்கமானவரான, இந்தர்ஜித் சிங் கோசல், அந்த அமைப்பின் கனடா பிரிவு தலை வராக உள்ளார். கனடா அதிகாரிகளுடன், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது கோசல் குறித்து முக்கிய தகவல்களை, ஆதாரங்களுடன் அவர் பகிர்ந்தார். இ தைத் தொடர்ந்து, சட் டவிரோதமாக ஆயுதக் கொள்முதல் செய்தது தொடர்பான வழக்கில், கனடா போலீசார் கடந்த வாரம், கோச லை கைது செய்தனர். கோசல் கைது செய்யப்பட்டது கடந்த ஓராண்டில், இது இரண்டாவது முறையாகும். கடந்த நவம்பர் மாதம் ஹிந்து கோவிலில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வந்தார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட கோசல், ஒரே வாரத்துக்குள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். வெளியே வந்த உடன், அஜித் தோவலுக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். 'பன் னுானை ஆதரிக்கவு ம், நவம்பரில் காலிஸ்தான் பொது வாக்கெடுப்பை ஏற்பாடு செய்யவும் தயாராக இருக்கிறேன். டில்லி காலிஸ்தான் ஆகிவிடும் ஜாக்கிரதை' என, அதில் அவர் கூறியுள்ளார். மே லும் அஜித் தோவலை கிண்டல் செய்யும் விதமாக, 'நீங்கள் ஏன் கனடா, அமெரிக்கா அல்லது எந்த ஐரோப்பிய நாட்டிற்காவது வந்து என்னைக் கைது செய்யவோ அல்லது நாடு கடத்தவோ முயற்சிக்கக்கூடாது? நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்' என்றும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
22-Sep-2025